கருவுறுதலுக்கு முன் பெண்கள் எப்படி தங்கள் உடலை தயார் செய்துக் கொள்ள வேண்டும்?

கருவுறுதலுக்கு முன் பெண்கள் எப்படி தங்கள் உடலை தயார் செய்துக் கொள்ள வேண்டும்?
குழந்தை பாக்கியம் வேண்டும் என்று முன்னர் கோவில், கோவிலாக சென்று வந்தனர். இன்று மருத்துவர்களிடம் சுற்றி திரிந்து வருகின்றனர். குழந்தை பாக்கியம் பெற உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சரியாக பார்த்துக் கொண்டாலே போதுமானது. முக்கியமாக பெண்கள். ஆண்களை பொறுத்தவரை விந்து திறன் மற்றும் இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே போதுமானது. ஆனால், பத்து மாதம் கருவில் குழந்தையை சுமந்து பெற்றெடுக்க பெண்கள் நிறைய சிரமங்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எதிர்கொள்கின்றனர்.
karu uruvagum murai, karu uruvaga tamil, karu thanga tips, karu muttai valarchi, karu undaga

எனவே, கருவுறுதலுக்கு முன்னர் பெண்கள் உடல் ரீதியாக எப்படி தயாராக வேண்டும் என பார்க்கலாம்...

 #1 ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற துவங்க வேண்டும். முக்கியமாக கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகமான உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை இரண்டும் கருவளத்தின் ஆரோக்கியத்தை குறைக்க செய்பவை ஆகும். கெமிக்கல் இல்லாத உணவுகளை உண்ண துவங்க வேண்டும்.

 #2 குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் குடல் சுத்தமாக இருந்தாலே ஆரோக்கியம் மேம்பட்டுவிடும். இதற்கு நீங்கள் அதிகமாக காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும். புரோபயாடிக் நிறைந்துள்ள தயிரை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

 #3 ஃபோலிக் அமிலச்சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இது பிரசவக் காலத்தில் ஆரோக்கியத்திற்கு உதவும் சத்தாகும்.

 #4 யோகா பயிற்சிகள்! யோகா செய்வது உடலின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். முக்கியமாக இரத்த ஓட்டம், இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரவல்லது. இதனால், கருவளம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

 #5 மன அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கருத்தரிக்கும் முன்னர் மட்டுமின்றி, குழந்தை பிறக்கும் வரை மன அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தியானம் மேற்கொண்டு வந்தால் மன அழுத்தத்தை குறைக்கவும், கவனத்தை ஒருமுகப்படுத்தவும் உதவும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

 #6 அக்குபஞ்சர் நிபுணர்களை அணுகுங்கள். சீரான அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்துக் கொள்வதால் கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்க முடியும். மேலும், ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...