
தண்ணீரில் விழுந்த போனை சரி செய்வது எப்படி?
தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?
மொபைல்
போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறி விட்ட இந்த காலத்தில் அவற்றை
பாதுகாப்பாய் வைத் திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக
தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.
சிலர் போன் தண்ணீரில் விழுந்தஉடன் அவசரஅவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள். இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.
உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும்.
பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.

Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாத படி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப் பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ).
அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம். Hairdryer போன்றவற்றை முயற்சி செய்யலாம்.
போன் நன்றாக காய்ந்தபின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்துகொண்ட பின் அதை ஆன் செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலும் ஆன் ஆகி விடும்,
இல்லை என்றால் வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும். அப்போதும் ஆன் ஆனால் போன் ஓகே, பேட்டரி பிரச்சினை, அப்போதும் இல்லை என்றால் கடைக் காரரிடம் கொண்டு போய் கொடுக்கவும்.
Thanneeril kai thavari mobile phone vilundhaal eppadi sariseivadhu, lifehacks, how to repair a phone fell in water, neeril vizhundhu vitta smart phone, how to dry phone drowned in water
No comments: