ஆண் குறியின் அளவு நீண்டு, பருத்து, கடப்பாரை போல இருக்க வேண்டுமா?
ஆண் குறியின் அளவு
நம்மில் பெருபாலானோர், நீலப்படம் (pornographic videos) பார்க்கிறோம், காமக் கதைகள் (sex stories) படிக்கிறோம், செக்ஸ் தொடர்பான புகைப்படங்கள் (photographs) பார்க்கிறோம்.
அவற்றை கூர்ந்து கவனித்தீர்களேயானால், ஒரு விஷயம் அடிக்கடி நம்மை உசுப்பிவிட்டுகொண்டே இருக்கும்.
அது தான் ஆண் குறியின் அளவு
(size of a penis).
(size of a penis).
காமக்கதைகளில் "அவனது உறுப்பு நீண்டு, பருத்து, கடப்பாரை போல இருக்கும்" என்பன போன்ற வசனங்களும். நீலப்படங்களில் நடிக்கும் பெரும்பாலானோரின் ஆணுறுப்பும் பெரிதாகவே இருக்கும்.
இதற்கு பின்னால் ஒரு பெரும் அரசியல் உள்ளது. ஆம், உங்களை கதை படிக்கத் தூண்ட வேண்டும் அல்லது படம் பார்க்கத் தூண்ட வேண்டும். அப்படி தூண்ட வேண்டுமெனில் சில மிகைப்படுத்தல் தேவைப்படுகிறது. அவை தான் நான் மேலே மேற்கோளில் குறிப்பிட்டவை.
உண்மையில் எல்லோருக்கும் ஆண் குறி அப்படி இருக்குமா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. இந்த படங்கள் மற்றும், கதைகள் பெண் மற்றும் ஆண்களில் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது.
பெருத்து நீண்ட ஆணுறுப்பு உள்ளவனே காமத்தில் சிறந்தவன் என்பது தான் அது.
அந்த படங்களில் அப்படிப்பட்டவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.
அதைப் பார்த்து பெண்கள் அப்படிப்பட்ட உறுப்பு உள்ள ஆண்மகன் வேண்டும் என்று ஆசை கொள்வதும், சிறிய உறுப்புள்ள ஆண்களோ தாழ்வு மனைப்பான்மைக்கு ஆளாகி, எழுச்சி குறைவு, பயம், திருமணம் செய்துகொள்ளாமல் இருத்தல் போன்றவற்றிற்கு ஆளாகிறார்கள்.
ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது. ஒரு ஆணுக்கு 5 அங்குல உறுப்பே உறவு கொள்ள போதுமானது.
3 அங்குலத்திற்கும் குறைவாக உள்ள ஆணுறுப்பு மிகவும் சிறிய ஆணுறுப்பு. அது உறவு கொள்ளத் தகுந்தது அல்ல. மிக சிலருக்கே இது போன்று மிகவும் சிறிய ஆணுறுப்பு (micro penis) உள்ளது. ஆனால் பெரும்பாலானோர், தங்கள் உறுப்பு சிறிதாகவே உள்ளதாகக் கருதுகிறார்கள்.
5 அங்குல நீள உறுப்பு உங்களுக்கு உள்ளதாயின் நீங்கள் கவலை கொள்ளாமல் இருங்கள். உங்கள் உறுப்பு சராசரி ஆண் உறுப்பாகும். அதனால் தைரியமாக தாம்பத்திய வாழ்கையை எதிர் கொள்ளுங்கள், தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளி வாருங்கள்.
தன்னம்பிக்கை தான் காமத்தில் மிகப்பெரிய சக்தி. தன்னம்பிக்கை இல்லாதவனின் உறுப்பு எவ்வளவு பெரிதாயினும் பயன் இல்லை. தன்னம்பிக்கை உள்ளவனின் உறுப்பு சிறிதாயினும் அவன் சிறப்பாக செயல்படுவான்.
நம்பிக்கை அதிகரிக்கும்போது உங்களால் காமத்தில் இன்னும் அற்புதமாக செயல்பட முடியும், உங்களின் துணையை நிச்சயம் மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
No comments: