முதல் முறை உறவுகொள்ளுகையில், பெண்ணுக்கு கட்டாயம் ரத்தம் வர வேண்டுமா?
முதல் முறை உறவுகொள்ளுகையில், பெண்ணுக்கு கட்டாயம் ரத்தம் வர வேண்டுமா? அது சரியா இல்லை தவறா?
Doctor பதில்:
முதல் முறை உறவுகொள்ளுகையில் ரத்தம் வராத பெண்ணை சந்தேகிக்கும் ஆண்கள் பலரும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் இப்படி? அப்படி ரத்தம் வந்தால் தான், அவள் கன்னி கழியாதவள் என்றும், இப்போ தான் முதல் முறை உறவு கொள்கிறாள் என்றும் ஆண்கள் நம்புவார்கள். ஆனால் சில உண்மைகளை தேந்துகொள்ள வேண்டும் நான்.
முதல் முறை உறவுகொள்ளுகையில் ரத்தம் எதனால் வருகிறது?
ரத்தம் எதனால் வருகிறது என்றால், பெண்ணின் உறுப்பினுள் கன்னித்திரை (hymen) என்கிற மிக மெல்லிய படலம் இருக்கும். அது கிழிகையில் தான் ரத்தம் வரும்.
ஆனால் இப்போது பல பெண்கள், விளையாட்டு, மிதிவண்டி ஒட்டுதல் என் பல செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால் கூட அவர்களின் அவர்கள் அறியாமலேயே கன்னித்திரை கிழிந்துவிடலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
எனவே கன்னித்திரை கிழிவது ஒரு சாதாரண நிகழ்ச்சியே. அதை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த சிறு விஷயத்தை வைத்து அவளின் கன்னித்தன்மை மீது சந்தேகம் கொள்ளாதீர்கள்.
No comments: