பிறப்புறுப்பை சுற்றிலும் உள்ள தோல் கருமையா இருக்கா..? போக்க சில வீட்டு வைத்திய முறைகள்...

மறைவிடங்களிலும் பிறப்புறுப்பை சுற்றிலும் உள்ள தோல் கருமை போக்க சில வீட்டு வைத்திய முறைகள், thol karumai niram poga veetu kurippugal, pirappu uruppu chutri ulla thol karppaga ulladhu enna seivadhi, beauty tips in tamilமறைவிடங்களிலும் பிறப்புறுப்பை சுற்றிலும் உள்ள தோல் கருமையா இருத்தல்:

பலரும் இதை கவனித்திருப்பீர்கள். உடல் சற்று மாநிறம் மற்றும் மாநிறத்திற்கும் சற்று அதிகமா சிவந்த நிறம் உடையவர்களின் அக்குள் பிரதேசம், தொடை இடுக்கு , பிறப்புறுப்பை சுற்றி உள்ள பகுதிகள் உடலின் மற்ற பகுதியைக் காட்டிலும் நிறம் மங்கி கறுத்தே காணப்படும். இதற்கான காரணம் பலருக்கும் புரியாமல் இருக்கலாம்.
(ஆண்களுக்கு இந்த நிற மாற்றம் எந்த பாதிப்பையும் மனதில் உருவாக்குவதில்லை. பெண்களே அதிகம் வருந்துகின்றனர்):
நம் நாட்டில் வெப்பம் அதிகம். அதனால் வியர்வை அதிகம் சுரக்கும். குறிப்பாக மறைவிடங்களில் உருவாகும் வியர்வை உலராமல் அப்படியே ஈரமாகவே இருக்கும். சரி காரணங்களைப் பார்ப்போம்.
1. பருத்தி அல்லாத செயற்கை இழையால் ஆன உள்ளாடைகளை உபயோகித்தல். இதனால், வியர்வை உறிஞ்சப்படுவது இல்லை. மாறாக அந்த வியர்வை அங்கேயே தங்கிவிடுகிறது. மேலும் நாம் நடத்தல், வேலை செய்தல் போன்றவற்றில் ஈடுபடுகையில் அங்கே அதிகப்படியான உராய்வு ஏற்படுகிறது. மறைவிடங்களில் உள்ள தோல்ப் பகுதியானது மற்ற இடங்களில் உள்ளதை விட மிகவும் மென்மையானது. தொடர்ந்து ஏற்படும் இந்த உராய்வினால் அந்த தோல் பகுதி கருமையாகத் துவங்குகிறது, நாளடைவில் ஒரு தழும்பைப்போலவே மாறி கருமை நிறமாகவே மாறிவிடுகிறது.
2. அடிக்கடி மறைவிடத்தில் உள்ள ரோமங்களை சவரம் செய்வதால் தோல் பகுதி கடினமாகி கறுத்து விடுகிறது. சில பெண்கள் ரோமங்களை அகற்ற சில ரசாயனம் மிகுந்த கிரீம்களை உபயோகிக்கின்றனர். அவற்றின் ரசாயனக் கலவை தோலைக் கருமையாக்கி விடும்.
3. ஈரம் அதிகமாய் இருந்தால் கிருமித் தொற்றுதல் மிக அதிகமாய் இருக்கும். புண் அல்லது அரிப்பு போன்றவை ஏற்பட்டு கருமயாக்கிவிடும்.

தோல் கருமை தீர்வு:

பெண்கள் பருத்தி அல்லாத செயற்கை இழையினால் நெய்த உள்ளாடைகளை தவிர்த்து, பருத்தியால் ஆன உள்ளாடைகளையே கட்டாயம் அணிய வேண்டும். அதனால் வியர்வை உறிஞ்சப்படும். மேலும் அதிக இறுக்கமான ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணியாமல், சற்று தளர்வான ஆடைகளை அணியலாம். இந்த இறுக்கமான ஆடைகளே வியர்வையுடன் சேர்ந்து அதிகப்படியான உராய்விற்கு காரணமாகிறது. உராய்வு தவிரக்கப்படாலே பாதி பிரச்னை சரி ஆகி விடும். அதே போல குளித்த பின்பு மறைவிடங்களில் உள்ள நீரை முற்றிலும் உலரும் வரை துடைத்து எடுத்து விட வேண்டும். அவை எவ்வளவு உலர்வாக உள்ளதோ அவ்வளவு நல்லது.
மேலும், ரசாயன ரோம அகற்றிகளை தவிர்க்கவும். அதற்கு பதில் வாக்சிங் (waxing) மூலம் ரோமங்களை அகற்றலாம்.
அடிக்கடி சவரம் செய்யாமல் சற்று இடை விட்டு. சவரம் செய்தல், ரோமங்களை வெட்டி விடுதல் (trimming) நிச்சயம் தோலை பாதிப்பிலிருந்து காக்கும்.

கருமை நிறத்தைப் போக்க சில வீட்டு வைத்திய முறைகள்:

1. எலுமிச்சம் பழத்தை கருமையா பகுதிகளில் சில துளிகள் பிழிந்து விட்டு, மெதுவாக மசாஜ் செய்துவிடலாம். அப்படி செய்கையில் எலுமிச்சை சாறு பெண்ணின் பிறப்பு உறுப்பிற்குள் சென்று விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எலுமிச்சை சாறு எரிச்சலைக் கொடுக்கும்.
2. தயிர் கொஞ்சம் எடுத்து அந்த பகுதிகளில் பூசி மசாஜ் செய்து விட்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.
3. 1 தேக்கரண்டி சந்தனம் மற்றும் 10 துளிகள் பன்னீர் துளிகள் சேது குழைத்து அதை அந்த பகுதிகளில் இட்டு, அரை மணிநேரம் கழித்து கழுவி விடலாம்.
உங்களுக்கு எது வசதியோ அதை செய்து கொள்ளுங்கள். இந்த வீட்டு வைத்திய முறைகள், முழுமையாக நிற மாற்றத்தை கொடுக்கும் என்று சொல்லி விட முடியாது. இருந்தாலும் லேசான நிறமாற்றம் தரும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...