ஒரு நாளைக்கு எத்தனை முறை உடல் உறவில் ஈடுபடலாம்?
நான் எனது துணையுடன் ஒரு நாளைக்கு எத்தனை முறை உடல் உறவில் ஈடுபடலாம்? அதற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் உண்டா?
மருத்துவர் பதில்:
ஒரு நாளைக்கு இத்தனை முறை தான் துணையுடன் உறவு கொள்ள வேண்டும் என்று எந்த வரைமுறையும் இல்லை. எத்தனை முறை வேண்டுமென்றாலும் உறவு கொள்ளலாம்.
ஆனால், கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய ஒரு விதி உள்ளது. அது என்னவென்றால், உங்களுக்கு உறவு கொள்ள நாட்டம் இருந்து உங்கள் துணைக்கு அந்த சமயத்தில் நாட்டம் இல்லை எனில் நிச்சயமாக அவரை வற்புறுத்தி உறவுகொள்ள வைக்கவோ உறவில் ஈடுபடவோ கூடாது. அதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.
அதனால முதலில் உங்கள் துணையிடம் கேளுங்கள், உறவு கொள்ள விருப்பம் இருப்பதாக தெரிவியுங்கள் அவரும் அதே மன நிலையில் இருந்தால் அல்லது நீங்கள் கேட்டதும் அந்த மனநிலையை உருவாக்கி உங்களுடன் உறவுக்கு தயார் ஆவாரேயானால் நிச்சயம் உறவு கொள்வதில் எந்த தவறும் இல்லை.
அப்படி அல்லாமல் சோர்வாக உள்ளது என்றோ மனது சரி இல்லை என்றோ இப்போது உறவு கொள்ள விருப்பம் இல்லை என்றோ சொன்னால் தயவு செய்து அவர் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்களின் இச்சையை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர் எதனால அப்படி சொல்கிறார் என்று அவரிடம் கேளுங்கள், அவருக்கு உங்களின் உதவி தேவைப்படுமாயின், அதை செய்ய முற்படுங்கள். நீங்கள் காண்பிக்கும் அன்பு நிச்சயம் அவரது மனநிலையை மாற்றும். சிறு நேரத்தில் அவரே இணங்கி உறவில் ஈடுபட ஒத்துக்கொள்ளலாம்.
விருப்பதின்பால் உண்டாகும் உறவிலே அதிக இன்பம் கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். அன்பினால மட்டுமே இந்த அற்புதங்களைச் செய்ய முடியும்.
No comments: