சாதாரண நேரங்களில் காம உணர்வு வருவது சரியா தவறா?
சாதாரண நேரங்களில் காம உணர்வு வருவது சரியா தவறா?
காமம் என்பது, பசி, தூக்கம், இருமல், தும்மல் போல நமக்கு ஏற்படும் ஒரு உணர்வே. எப்படி மேற்சொன்ன பசி தூக்கம் போன்ற உணர்வுகள் வரும்போது நாம் அவற்றை பெரிதுபடுத்துவது இல்லையோ அதுபோல காம உணர்வையும் கருத வேண்டும்.
சிலர் காம உணர்வு வருவதால், தான் தவறு செய்கிறோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் சிக்கித் தவிக்கிறார்கள். அது ஒரு பாவச்செயல் போன்றும், ஏதோ பெரும் குற்றம் இழைத்துவிட்டது போலவும் கருதி மனதுக்குள் புழுங்கி, தேவை இல்லாத மனக்கவலைக்கு ஆளாகிறார்கள் அது தேவை இல்லாத ஒன்று.
எப்படி பசி, தூக்கம் வருகையில் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறீர்களோ, அது போலவே காம உணர்வு வருகையிலும் நடந்து கொள்ளுங்கள். அது வரும் போகும். அப்படி ஒரு உணர்வு நமக்குள் எழவில்லை என்றால் தான் அதற்காக வருத்தப்பட வேண்டுமே ஒழிய வருவதற்காக இல்ல. அப்படி ஒரு உணர்வு வரவில்லை என்றால் தான் நமக்குள் ஏதோ பிரச்சினை உள்ளது என்று அர்த்தம்.
ஆகவே அதை ரசியுங்கள், மாறாக வெறுக்காதீர்கள், உங்களையும் வருத்திக்கொள்ளாதீர்கள்..
No comments: