சிறுநீரக பிரச்சனையிலிருந்து மீண்டு வர; சிறுநீரகம் சீராக செயல்பட இயற்கை மருத்துவ முறைகள்..!!
{Siruneeraga prachanaigal, Siruneeraga prachchanaiyil irundhu meendu vara; siruneeragam seeraga seyalpada iyarkai maruththuva muraigal, kidney disease cure natural remedies and tips in tamil}
- தனியா, நெல்லிவற்றல், சீரகம் மூன்றையும் வகைக்கு ஐந்து கிராம் வீதம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு கால் லிட்டராக குறுக்கி வடிகட்டி ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாக குடித்து வரவும்.
- சிறுநீரை வெளியேற்றும் நரம்புகளின் செயலூக்கிகள் பலதும் தலையிலும், முதுகு தண்டுவடத்திலும் அமைந்துள்ளதால் அவைகளின் சீரான செயல்பாட்டிற்கு நீங்கள் வாரம் இருமுறை காலையில் நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை 4:2:1 என்ற விகிதத்தில் எடுத்து இரும்புக் கரண்டியில் சூடாக்கி தலையிலும், முதுகு தண்டுவடத்திலும் வெதுவெதுப்பாக தடவி அரை } முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு குளிக்கவும்.
- ஏலக்காய் பொடித்து ஒவ்வொரு சாப்பாட்டிற்கு பிறகும் சிறிதளவு சாப்பிடவும். ஏலக்காய்க்கு சிறுநீரை நன்றாக வெளியேற்றும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது.
- நெருஞ்சி விதை சிறுநீரகச் செயல்பாட்டை நன்றாக்கித் தருமென்பதால் நீங்கள் பதினைந்து கிராம் நெருஞ்சி விதையை பதினைந்து கிராம் நீர்முள்ளி விதையுடன் சேர்த்து நன்றாக அரைத்து துணியால் சலித்து மூன்று சிட்டிகை சிறிது வெந்நீருடன் காலை, மாலை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட நல்ல குணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
- சிறுநீர் பெருக்கிகளாகிய புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, கோவைக்காய், முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் தாராளமாய் சேர்த்துக் கொள்ளவும். இதன்மூலம் சிறுநீரில் வரும் பித்தத்தினுடைய ஒரு குணமாகிய விஸ்ரம் எனும் துர்நாற்றமானது விலகி சிறுநீரும் தாரையாக வெளியேறும்.
உடற்சூட்டை அதிகரிக்கும் பட்டை, சோம்பு, கரம் மசாலா, மீன், சிக்கன், பார்பெக்யு பாம்ப்ரட், ஆஃப்கானி கபாப், மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி போன்றவற்றைச் சாப்பிடுவதை சிறிது காலம் நிறுத்தவும்.
siruneeraga prachanaigal, kidney problem cure natural medicine in tamil, siruneeraga kolaru theera maruthuvam, siruneeraga prachchanaiyilirundhu meendu vara; siruneeragam seeraga seyalpada iyarkai maruththuva muraigal, siruneeragam tamil maruthuvam, problems and solution, natural medicines, natural remedies in tamil for kidney problems, disease
No comments: