360 டிகிரி கோணத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் கேமரா!


360 டிகிரி கோணத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கேமரா!  (360 degree Camera News in Tamil)

சாதாரண கேமரா மூலம் ஓர் அறையின் உள்பகுதி முழுவதையும் புகைப்படம் எடுக்க வேண்டுமானால் நாம் பகுதி, பகுதியாகத்தான் படம் எடுக்க முடியும். ஆனால் தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள 360 டிகிரி கேமரா மூலம் ஒரே தடவையில் அறை முழுவதும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவிடலாம்.

 

கேமராவை அதற்குரிய குச்சியில் இணைத்துக் கொண்டு கையில் எடுத்துச் சென்றும் இயக்கலாம். தூரத்தில் ஓர் இடத்தில் நிலையாக வைத்துக் கொண்டு செல்போனில் பதிவேற்றம் செய்யப்பட்ட செயலி மூலமாகவும் இயக்கலாம்.

இந்த கேமராவில் இணைக்கப்பட்டுள்ள லென்சுகள் (தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்ப லென்சுகளின் எண்ணிக்கை மாறுபடும்) ஒரே சமயத்தில் 360 டிகிரி கோணத்தில்  புகைப்படங்களை எடுக்கிறது. பின்னர் சரியான கோணத்தில் அவற்றை பிசிறு இன்றி குறுகிய நேரத்தில் ஒரே படமாக இணைத்தும் தருகிறது. இவ்வாறு இணைக்கப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகளை கேமராவிலிருந்து நேரடியாக செல்போன், தொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் மேலிருந்து கீழாகவோ, வலம்-இடமாகவோ 360 டிகிரி கோணத்தில் பார்த்து ரசிக்கலாம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற கேமராக்கள் வெளிவந்தாலும் GoPros, GIROPTIC, Samsung   உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அதன் தரத்தை உயர்த்தி தற்போது சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. படத்தின் தரம், தயாரிப்பு நிறுவனம், கேமராவின் சேமிப்புதிறன், ஆடியோ ஆகியவற்றைப் பொருத்து பல்வேறு விலைகளில் கிடைக்கிறது.

360 degree video samples:



- Dinamani News Paper

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...