ரயில் பயணத்தை திட்டமிட உதவும் 'கூகுள் ட்ரான்சிட்'

[rail payanattahi thittamida udhavum google transit] ரயில் பயணத்தை திட்டமிட உதவும் 'கூகுள் ட்ரான்சிட்'

 
rail payanattahi thittamida udhavum google transit, benefits of google transit option in google maps, how to operate google transit, Computer in tamil, tamil technology news
இப்போதெல்லாம், புது இடத்திற்கு போனால், அங்குள்ள யாரையும் கேட்காமல், ஸ்மார்ட் போனில் கூகுள் மேப்பை திறந்து வழியை அடையாளம் கண்டு போவது இந்தியாவில் பேஷனாகி விட்டது. ஆனால், இந்திய ரயில்வேயின் தளத்தை திறக்க முயன்றால் அது 'லோட்' ஆவதற்குள் நமக்கு மூடு அவுட்டாகி விடும். இந்த குறையை போக்க வந்திருக்கிறது. கூகுள் மேப்பில், 'கூகுள் ட்ரான்சிட்(Google Transit)' என்ற புதிய சேவை.


கூகுள் ட்ரான்சிட் மூலம் குறிப்பிட்ட நகருக்கு வரும், போகும் ரயில்களின் நேரங்களை தெரிந்து கொண்டு பயணத்தை அதற்கேற்ற படி திட்டமிடலாம். இந்த சேவையை பெற, நீங்கள் கிளம்பும் ஊர், போக விரும்பும் ஊர் ஆகியவற்றை கூகுள் மேப் தளத்தில் உரிய இடத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். பின் டாப் டவுன் மெனுவின் கீழ் பகுதியில் இருக்கும், 'ஷெட்யூல் எக்ஸ்ப்ளோரர்(Schedule explorer)' என்ற லிங்கை அழுத்தினால் அந்த தடத்தில் செல்லும் ரயில்கள், நேரம், தூரம் ஆகியவை படத்திலிருப்பது போல தெளிவாக தெரியும்.

'கூகுள் மேப் சேவையை இன்னும் விரிவானதாக, துல்லியமானதாக, பயனுள்ளதாக ஆக்குவதற்காகவே இந்த சேவையை சேர்த்திருக்கிறோம். இந்திய ரயில்வேயின் கால அட்டவணையை இணைத்ததன் மூலம் தகவல்களை பயணிகள் எளிதாக திரட்டலாம்' என்கிறார், கூகுள் மேப்பின் திட்ட இயக்குனர் சுரேன் ருஹேலா.
rail payanattahi thittamida udhavum google transit, benefits of google transit option in google maps, how to operate google transit, Computer in tamil, tamil technology news

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...