கோவில் கோபுர ரகசியமும், நம் முன்னோரின் வியத்தகு விஞ்ஞான அறிவாற்றலும்

கோவில் கோபுர ரகசியமும், நம் முன்னோரின் வியத்தகு விஞ்ஞான அறிவாற்றலும்: ( Kovil Kopura ragasiyam - Munnorgalin viyathagu vingnaana arivaatral) hindu temple science


Kovil Kopura ragasiyam - Munnorgalin viyathagu vingnaana arivaatral, kalasam, navathaniyam, koyil kudamulukku vaikka kaaranam, hindu temple science, aanmigam, ariviyal, natural lightning arrester, கோவில் கோபுர ரகசியம், நம் முன்னோரின் வியத்தகு விஞ்ஞான அறிவாற்றலும்
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?

அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகிய தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

தானியங்கள் அழிந்து போனால் மீண்டும் பயிர் செய்ய:


அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே.

மின்னலை அதிகமாக தாங்கும் ஆற்றலை பெற்ற நவதானியங்கள்:


நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சாமை, எள் (nel, uppu, kelvaragu, thinai,varagu, solam, makkaa solam, saamai, ell) ஆகிய தானியங்களை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். இதற்க்கு காரணம், வரகு மின்னலை அதிகமாக தாங்கும் ஆற்றலைபெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

12 வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா, ஏன்?


இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் மின்னலைத் அதிகமாக தாங்கும் சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..? ஆச்சர்யம்தான்.

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது

Kovil Kopura ragasiyam - Munnorgalin viyathagu vingnaana arivaatral, kalasam, navathaniyam, koyil kudamulukku vaikka kaaranam, hindu temple science, aanmigam, ariviyal, natural lightning arrester, கோவில் கோபுர ரகசியம், நம் முன்னோரின் வியத்தகு விஞ்ஞான அறிவாற்றலும்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...