முட்டை சாப்பிடாதவர்களுக்கு எற்ற அதற்க்கு இணையான சத்துள்ள உணவுகள்

முட்டை சாப்பிடாதவர்களுக்கு எற்ற அதற்க்கு இணையான சத்துள்ள உணவுகள்..

 
சிலருக்கு முட்டை சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்படி முட்டை சாப்பிடாதவர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படாமல் இருக்க, அதற்கு இணையாக புரோட்டீன் நிறைந்த உணவுகள் என்னவென்று தெரிந்து சாப்பிட வேண்டும்.
 
ஸ்பைரூலினா: ஸ்பைரூலினாவில் முட்டையை விட அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. அதிலும் 2 டேபிள் ஸ்பூன் உலர்ந்த ஸ்பைரூலினாவில் 8 கிராம் புரோட்டீன் உள்ளது. எனவே இதனை சாலட் உடன் சேர்த்து சாப்பிடலாம். வேண்டுமெனில் ஸ்பைரூலினா காப்சூல்களை வாங்கி தினமும் 2 சாப்பிடலாம்.
சோயா பீன்ஸ்: 1/4 கப் சோயா பீன்ஸில் 15 கிராம் புரோட்டீன் உள்ளது. எனவே நீங்கள் சைவ உணவாளியாக இருந்தால், இதனை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிலும் சோயா பீன்ஸ் கொண்டு மசாலா, குருமா செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
சீஸ்: பால் மற்றும் பால் பொருட்களில் புரோட்டீன் அதிகம் இருக்கும். அதிலும் சீஸில் புரோட்டீன் இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு சீஸை உணவில் சேர்த்துக் கொள்வது, அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
பூசணிக்காய் விதை: பூசணிக்காய் விதையில் புரோட்டீன் மட்டுமின்றி, நார்ச்சத்து மற்றும் மக்னீசியமும் அதிகம் உள்ளது. எனவே அதனை தினமும் சாலட்டுகளில் சேர்த்தோ அல்லது ஸ்நாக்ஸ் நேரத்திலோ எடுத்துக் கொள்வது நல்லது.
தயிர்: அனைவருக்கும் தயிரில் புரோபயோடிக்ஸ் என்னும் நல்ல பாக்டீரியா உள்ளது என்று மட்டும் தான் தெரியும். ஆனால் அதில் முட்டையை விட அதிக அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே அன்றாடம் தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள தவறாதீர்கள்.
Alternative food for Egg, Health Tips, Iyarkai unavu, Natural Food, Muttai saapidadhavargal sappida vendiya protein niraindha iyarkkai unavugal, Muttaikku mattrana unavugal, poosanai vidhai, thayir, cheese, spirulina, soya beans health benefits, muttai sappidalaama, koli muttai sappidaamal irukka sila unavugal

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...