அழகுக் குறிப்புகள்.. ( Pengal Azhagu kurippugal)

அழகுக் குறிப்புகள் - தமிழ்வாணன்( Pengal Azhagu kurippugal)

கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

பெண்கள் பச்சைத் தக்காளிப்பழங்களைத் தினமும் சாப்பிட்டு வரவேண்டும். சாப்பிட்டு வந்தால், தோல் கொஞ்சம் சிவப்பாக மாறும். தோல் சுருக்கம் மாறும். நிறமும் மாறி, சுருக்கமும் மறைந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

Pengal Azhagu kurippugalகோழி முட்டையை உடைத்து வெள்ளைப் பாகத்தை மட்டும் ஒரு கோப்பையில் ஊற்ற வேண்டும். இதில் கொஞ்சம் எலுமிச்சம் பழச் சாறைக் கலக்க வேண்டும். கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்து இதில் சேர்க்க வேண்டும். சேர்த்து, மூன்றையும் கலக்கி, பெண்கள் தங்கள் முகததில் தடவிக் கொள்ள வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து சோப்புப் போட்டு முகத்தைக் கழுவிவிட வேண்டும். இப்படிச் செய்து வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.

தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலை முடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் பட விடக் கூடாது.

முகத்தில் பரு இருக்கிறதா? இருந்தால், பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் விகாரமுள்ள, மாறாத வடுக்கள் விழுந்து விடும். எருமைப் பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.

பெண்களும் சரி, ஆண்களும் சரி, தங்களுக்கு ஊளைச் சதை விழாமலிக்கப் பழம் சாப்பிட்டு வரவேண்டும். பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் ஊளைச் சதை கரையும். பப்பாளிப்பழம் ஒன்றுக்குத்தான் ஊளைச் சதையைக் குறைக்கும் சக்தி உண்டு.

பனிக்காலத்தில் சிலருக்குத் தோலில் சில இடங்களில் வெடிப்புத் தோன்றும். வெடிப்புத் தோன்றிய இடங்களில் கொஞ்சம் வாஸ்லைனைத் தடவி வரவேண்டும். தடவி வந்தால் வெடிப்பு மறைந்துவிடும்!

தங்கள் கண்களுக்கு மை தீட்டிக் கொள்ளும் பழக்கமுள்ள பெண்கள், படுக்கப் போகும்போது சோப்புப்போட்டு முகத்தைக் கழுவிவிட்டு அதன் பின்னரே படுக்க வேண்டும். கண் மையுடன் தூங்கக் கூடாது. கண்மையுடன் தூங்கினால் கண்கள் சீக்கிரம் கெட்டுப் போகும்.

குளித்தவுடன் உடல் முழுவதும் சிறிது பவுடர் போட்டுக் கொண்டால் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

முகத்தில் தோல் உரிந்தால் அதைப் போக்க சிறிது கிளிசரின், எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவுங்கள். பிறகு சோப்பு போட்டு முகத்தைக் கழுவுங்கள். உரிந்த தோல் வந்து விடும்.

தேங்காயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தோல் பளபளப்புக் குறையாமலும், கோளாறு ஏற்படாமலும் தேங்காய் பார்த்துக் கொள்கிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்களும், இருதயநோய் உள்ளவர்களும் தேங்காயைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

முகத்தை, சோப்பு மட்டும் போட்டுக் கழுவிக் கொண்டிருக்கக் கூடாது. பயித்தம் மாவு, சிகைக்ககாய் ஆகியவற்றையும் கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும். இப்படிச் செய்தால்தான் முகத்தில் இருக்கும் பளபளப்பு குறையாமல் இருக்கும்.

பெண்கள் தினமும் படுக்கப் போகும் போது புருவங்களிலும் இமைகளிலும் கொஞ்சம் விளக்கெண்ணையைக் தடவிக் கொண்டால், புருவங்களிலும் இமைகளிலும் முடி நன்றாக வளரும். பெரிதாக வளரும். இதனால் அழகு அதிகமாகும

முகத்தில் எண்ணெய் வடிகிறதா? இதைப் போக்கத் தினசரி காலையிலும் இரவு படுக்கப்போகும் போதும் முகத்தில் எலுமிச்சம் பழத்தை அறுத்துக் தேயுங்கள். எண்ணெய் பசை போய்விடும்.

அழகுக் குறிப்புகள் - தமிழ்வாணன்( Pengal Azhagu kurippugal)

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...