தனக்கு பெண் குழந்தை பிறந்ததையொட்டி 3 லட்சம் கோடியை உலகுக்கு தந்த பேஸ்புக்கின் நிறுவனர் Mark Zuckerberg

தனக்கு பெண் குழந்தை பிறந்ததையொட்டி 3 லட்சம் கோடியை உலகுக்கு தந்த பேஸ்புக்கின் நிறுவனர் Mark Zuckerberg


Mark Zuckerberg donate 99 % share - daughter , new born


செல்ல மகள் வந்தாள்... 3 லட்சம் கோடியை உலகுக்கு தந்தாள்...! 
சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனக்கு பெண் குழந்தை பிறந்ததையொட்டி தனது நிறுவனத்தின் 99% பங்குகளை அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். அப்பங்குகளின் தற்போதைய மதிப்பு சுமார் 45 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 31 வயதேயான சக்கர்பெர்க்கின் இச்செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மகளுக்குக் கடிதம்

சக்கர்பெர்க் – பிரிசில்லா சான் தம்பதியினருக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. மேக்ஸ் எனப் பெயரிடப்பிட்ட தங்கள் மகளுக்கு பேஸ்புக் வாயிலாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். இத்தம்பதியினர். தங்கள் மகளுடைய எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கும் என்று அதில் கூறியுள்ள அவர்கள், சக்கர்பர்க்கின் மனைவி சான் ஃபேஸ்புக் நிறுவனத்தில் தனக்கு சொந்தமான 99 சதவீத பங்குகளை ‘சான் சக்கர்பெர்க் இனிஷியேடிவ்’ எனப்படும் தங்கள் அறக்கட்டளைக்கு வழங்குவதாக அறிவித்தனர்.

“மனித வள மேம்பாட்டிற்காகவும், அடுத்த தலைமுறை குழந்தைகளிடையே சமத்துவத்தை ஊக்குவிப்பதுதான் இந்த அறக்கட்டளையின் இதன் தலையாய நோக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளனர். “இந்த அறக்கட்டளையின் முதல் பணி நோய்களுக்கு தீர்வு காண்பதும், மக்களை இணைப்பதும் மற்றும் பலமான சமூகத்தை உருவாக்குவதும் தான். இதற்காக பணியாற்றி வரும் பலருக்கு முன்னால் எங்கள் பங்களிப்பு மிகவும் சிறியது தான். அனைவரோடும் இணைந்து நாங்கள் செயல்படத் தயாராக இருக்கிறோம்” என்று அக்கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

“எனக்கும் உன் அம்மாவிற்கும் நீ எந்த அளவிற்கு நம்பிக்கை ஊட்டியுள்ளாய் என்று சொல்ல வார்த்தைகளே கிடையாது. நீ வாழப்போகும் இவ்வுலகில் நாங்கள் இருப்பதற்கான காரணத்தை நீ ஏற்கனவே தந்துவிட்டாய். உன்மேல் அன்பால் மட்டும் இதை நாங்கள் செய்யவில்லை. அடுத்த தலைமுறை குழந்தைகள் மீது எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” என்று பாசமம் பொங்க கலந்து கடிதம் எழுதியுள்ளார் மார்க்.

45 பில்லியன் அமெரிக்க டாலர்!

சக்கர்பெர்க் வழங்கியுள்ள இப்பங்குகளின் மதிப்பு சுமார் 45 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்(இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சம் கோடி ). இதுவரை பல பொதுநல காரியங்களுக்காக பங்களித்துள்ள சக்கர்பெர்க்கின் இச்செயல் உலகம் முழுவதும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் குவித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து பேஸ்புக் வெளியிட்டுள்ள கமென்டில்,”இது ஒரு உண்னதமான கடிதம். வருங்கால சந்ததியரின் வாழ்க்கையை சீராக்க சிறந்த முயற்சி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பங்குகளை வழங்கியதால் பேஸ்புக்கை நிர்வகிக்கும் அவரது மதிப்பு குறைந்து விடாது என்றும், பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் தொடர்வார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவரான வாரன் பஃபெட் சக்கர்பெர்கை வெகுவாக பாராட்டியுள்ளார். “சக்கர்பெர்க்கின் இம்முடிவு சற்று ஆச்சரியம் தான். ஆனால் மிகச் சிறப்பான முடிவு. 70 வயது ஆன பிறகு தனது சொத்துகளை சேவைகளுக்கு வழங்காமல், மிகவும் இளம் வயதிலேயே முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. சக்கர்பெர்க் தனது தலைமுறையினருக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் விளங்குகிறார்” என்று பாராட்டியுள்ளார்.

இதொன்றும் புதிதல்ல..

மைக்ரோசாப்டின் நிறுவனர் பில் கேட்ஸ் கூறுகையில்,”இன்று நீங்கள் செய்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது. உங்கள் மகள் மேக்சும், இன்றைய காலகட்டத்தில் பிறக்கும் மற்ற அனைத்து குழந்தைகளும் நமக்குத் தெரிந்ததைவிட ஒரு மிகச்சிறப்பான உலகத்தில் வாழ்வார்கள் என்பது உறுதி. தாங்கள் சொல்லியதுபோல் இன்று விதைக்கும் விதை வளரும். நீங்கள் இன்று விதைத்திருக்கும் விதை வெற்றியைத் தர வாழ்த்துக்கள்” என்று மனமார வாழ்த்தியுள்ளார்.

சக்கர்பெர்க் ஒருசமயம்,பில் கேட்சை தனது பால்ய கால ஹீரோவாகக் குறிப்பிட்டுள்ளார்.அவரது சமூக அக்கறையே சமூக சேவைகள் செய்வத்ற்கு தன்னைத் தூண்டியதாகவும் கூறியுள்ளார். இதற்கு முன் 2010ஆம் ஆண்டு இவர்கள் மூவரும் இணைந்து, ‘தி கிவிங் பிளெட்ஜ்’ என்ற அமைப்பைத் தொடங்கி, தங்களது சொத்துக்களில் பாதியை அறக்கட்டளைகளுக்கு வழங்குவது எனத் தீர்மானித்தனர்.

சக்கர்பெர்க் பல சமூக நலக் காரியங்களை இதற்கு முன்னரும் செய்துள்ளார். தனது சான்-சக்கர்பெர்க் அறக்கட்டளை மூலம் 2013ல் மக்கள் நலப் பணிகளுக்காக சிலிகான் வேலி பவுண்டேசன் என்ற அமைப்புக்கு 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கினார். கடந்த ஆண்டு உலகையே உலுக்கிய எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது இத்தம்பதி. அதுமட்டுமின்றி அமெரிக்க பள்ளிக்கூட மேம்பாட்டிற்காக 2010ம் ஆண்டிலிருந்து சக்கர்பெர்க் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தங்கள் குழந்தையப் பற்றி மட்டும் நிணைக்காமல் அனைத்து குழந்தைகளின் நலனும் முக்கியம் எனக்கூறும் இத்தம்பதிக்கு கோடி லைக்ஸ். இதன் மூலம் அவர்கள் இளம் தலைமுறைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் விளங்குகின்றனர். மகள் பிறந்ததற்காக இத்தம்பதியருக்கு போஸ்புக்கிலேயே வாழ்க்கையை கழிக்கும் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

பணம் இருக்கும் இடத்தில் பாசம் இருக்காது என்று யார் சொன்னது?
 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...