உட்கட்டாசனம் - செய்முறை

செய்முறை: நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பின் கால்களுக்கு இடையில், ஒரு அடி அகலம் இருக்குமாறு காலை விரித்து வைக்கவும்.
utkattaasanam seimurai in tamil, yoga in tamil, Free yogasanam training

கைகளை நேராக தோள்பட்டை அளவிற்கு முன்னே நீட்ட வேண்டும். உடம்பை மெதுவாக கீழே இறக்கி நாற்காலியின் மீது அமர்வது போல் உட்கார வேண்டும். தொடையின் மேல் பகுதி கிடைமட்டமாக இருக்க வேண்டும். ஆசனத்தின் இறுதி நிலையில் முதுகெலும்பு நேராக, 90 டிகிரியில் இருக்க வேண்டும். முன் பக்க உடம்பை வளைக்க கூடாது.

கால அளவு: 20 அல்லது 30 வினாடிகள் வரை செய்ய வேண்டும். ஆரம்ப நாட்களில், 5 முதல் 10 வினாடிகள் வரை செய்யலாம்.
சுவாசம்: ஆசன நிலையில் சாதாரண மூச்சில் இருக்க வேண்டும். செய்து முடித்த பின் நன்றாக ஆழ்ந்து மூச்சு இழுத்து விட வேண்டும்.
பலன்கள்: கணுக்கால் மூட்டு, கால் சதைகள் பலம் பெறும். கால் முட்டி பலம் பெறும். தோள்பட்டையில் உள்ள இறுக்கத்தை நீக்கும்; கால் மூட்டு வீக்கம் நீங்கும்.

- கிருஷ்ணமூர்த்தி,
கிருஷ்ணமூர்த்தி யோகா பவுண்டேஷன்,


kanukkaal moottu, kaal sadhaigal palam pera, kaal mutti valimai perum, tholpattai irukkam neengum, kaal moottu veekkam neenga yogasanam, yoga in tamil, utkattaasanam seiyum murai, how to do utkatasana, chair pose instructions, utkatasana steps in tamil

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...