ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!
தற்போது
'ஆன்லைன்' எனப்படும் இணைய வழி மூலம் பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்து
அவற்றைத் தருவித்துக்கொள்ள விரும்புவோர் அதிகரித்து வருகிறார்கள்.
அதனால்தான் மின்னணுச் சாதனங்கள் முதல் இறைச்சி, மீன், மளிகைப் பொருட்கள்
வரை அனைத்தும் ஆன்லைனிலேயே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வழி
விற்பனையும் எகிறி வருகிறது.
நேரம், போக்குவரத்துச் செலவு, அலைச்சலை மிச்சப்படுத்தலாம் என்பதுடன், சில பொருட்களுக்குக் கிடைக்கும் விலை தள்ளுபடியும் பலரையும் ஆன்லைனில் ஆர்டர் போடச் சொல்லி ஈர்க்கிறது.
ஆனால் ஆன்லைனில் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்...
நீங்கள் வீட்டில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்பவராக இருந்தால், நீங்கள் ஆர்டர் செய்யும் இணையதளம் நம்பகத் தன்மையானதுதானா முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம்.
நீங்கள் வெளியே ஏதாவது ஓர் இணைய மையத்தில் இருந்து ஆர்டர் செய்பவராக இருந்தால் அங்கு 'ஸ்கிரீன் கேப்சரிங்' தொழில்நுட்பம் அல்லது சில மென்பொருட்களைப் பயன்படுத்தியோ உங்கள் பாஸ்வேர்டு அல்லது கிரெடிட் கார்டு தகவல்கள் திருடப்படும் அபாயம் இருக்கிறது. எனவே வெளி இணைய மையங்களை கூடியமட்டும் தவிர்த்திடுங்கள்.
சில சமயம் 'மொபைல் ஆப்ஸ்'களை பயன்படுத்தும்போது அதன் விதிமுறைகளை சரியாக படித்துப் பாருங்கள். சில ஆப்ஸ்கள் உங்கள் தகவல்களை பிற நிறுவனங்களுக்கு விற்றுவிடும். உங்கள் பர்சனல் தகவல்களான செல்போன் எண், ஈ-மெயில் ஐடி, கிரெடிட் கார்டு நம்பர் போன்ற தகவல்கள் இதுபோன்ற ஆப்ஸ்களால் பிறருக்கு அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்பதை உணருங்கள்.
நீங்கள் ஆர்டர் செய்யும் இணையதளம் அல்லது ஆப்ஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் அவசியம் படித்துப் பாருங்கள். ஒருவேளை உங்கள் தகவல் திருடப்பட்டது என நீங்கள் புகார் கூறினால்கூட, அதற்கு அவர்கள் ஏற்கனவே எங்கள் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று கூறிவிடுவார்கள்.
நீங்கள் பொருள் வாங்கும் இணையதளத்தில் இருக்கும் நிபந்தனைகள், விதிமுறைகளை படிக்கும்போது அவை திருப்திகரமானதாக இல்லையெனில் அந்த தளத்தில் ஆர்டர் செய்யாதீர்கள்.
அவசரம், அவசியம் என்றால் மட்டும் பிரவுசிங் சென்டருக்கு சென்று ஆர்டர் செய்யுங்கள். அதன்பின் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் உங்கள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றி விடுங்கள்.
உங்கள் பிரவுசரில் நீங்கள் கடைசியாகப் பயன்படுத்திய இணையதளங்களின் பட்டியல், அதன் ஹிஸ்டரி பதிவில் இருக்கும். அதை டெலிட் செய்தால் உங்கள் பாஸ்வேர்டு, கிரெடிட் கார்டு நம்பர் ஆகியவை அழிக்கப்பட்டு விடும்.

ஆன்லைனில் ஆர்டர் கொடுப்பது எளிதுதான். ஆனால் எச்சரிக்கை அவசியம்!
தினத்தந்தி
தினத்தந்தி
No comments: