வை - பைக்கு குட்பை... வந்துவிட்டது லி-பை!

வை - பைக்கு குட்பை... வந்துவிட்டது லி-பை! ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் லி-பை என்ற தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கின்றனர். வை-பை தொழில்நுட்பம் ரேடியோ அலைவரிசையை பயன்படுத்துகிறது.

ஆனால் லி-பை உபயோகிப்பது நம் கண்ணுக்குத் தெரியும் எல்.இ.டி., போன்ற விளக்கு வெளிச்சம், அகச் சிவப்புக் கதிர் போன்றவற்றை பயன்படுத்துகிறது. ஒளியைப் பயன்படுத்துவதால் தகவல் பரிமாற்றம் மிகவும் வேகமாக நடக்கும். இணையத்தில் லி-பை மூலம் ஒரு நொடியில் 30 முழு படங்களையே டவுண்லோடு செய்யலாம். அதாவது, ஒரு வினாடிக்கு 224 ஜிகாபிட் வேகம். இந்த தொழில்நுட்பத்திற்கு லிபை என்று பெயரிட்டவர் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ்.
இன்னும் சில வருடங்களில் உலகெங்கும் 14 பில்லியன் மின் விளக்குகள் இருக்கும் என்கின்றனர். எனவே, 14 பில்லியன் லி-பை ஒளிபரப்பு மையங்கள் இணையப் பயனாளிகளுக்குக் கிடைக்கும்.

நன்றி : தின மலர்

ரமணியன்
Wi-Fi kku good bye vandhuvittadhu li-fi, New technology instead of Wi-Fi technology,

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...