இரவு உணவை முடித்ததும் இந்த தப்ப செய்யாதிங்க...

இரவு உணவை முடித்ததும் இந்த தப்ப செய்யாதிங்க...[ iravu unavu mudindhadhum indha thappai seiyyadhinga]

நம் உடலை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் நமக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை......

வாக்கிங் செல்வது;இரவு உணவை முடித்துக் கொண்டு நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது என பலர் அறிவுரை கூறுவதுண்டு. ஆனால் அது முற்றிலுமாக கேடு விளைவிக்கும் செயல் என்றே கூறலாம். ஏனெனில் சாப்பிட்ட உடன் நடக்கும் போது கைகளுக்கும், கால்களுக்கும் இரத்தம் வேகமாகப் பாய்வதால் செரிமானம் தாமதமாகவே நடைபெறுகிறது. மேலும், சாப்பிட்ட பின் நடப்பதால் சிலருக்கு வயிற்று வலியோ, தலைச்சுற்றலோ ஏற்படும்.

ப்ரஷ் செய்வது;இரவு உணவுக்குப் பின் உடனடியாக பல் துலக்க கூடாது. ஏனெனில் உணவுகளை மென்று சாப்பிடுவதற்காக, பற்களுக்கு நிறைய வேலைகள் கொடுப்பதால், அது மீண்டும் வலுப்பெற சிறிது நேரமாகும். எனவே குறைந்தது 30 நிமிடங்கள் கழித்தே பல் துலக்க வேண்டும்.

ஷவர் குளியல் கூடாது;சாப்பாட்டிற்கு பிறகு நன்றாக குளித்துவிட்டால் தூக்கம் நன்கு வரும் என சிலர் ஷவர் குளியல் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் குறிப்பாக வயிற்றுக்குப் போக வேண்டிய இரத்தம் குறைந்து விடுவதால், செரிமானம் பாதிக்கப்படுகிறது.

லாங் ட்ரைவ்;பொதுவாக சில வாகன பிரியர்கள் இரவு உணவை முடித்துவிட்டு நீண்ட தூரம் வண்டியில் பயணித்துவிட்டு வர வேண்டும் என விரும்புவர். ஆனால் இரவு உணவுக்குப் பின் வண்டி ஓட்டுவதும் நல்லதல்ல. மேலும் வயிறு முழுக்க சாப்பாடு நிரம்பி இருப்பதால், ஓட்டுவதில் முழுமையாக கவனம் செலுத்த முடியாது. எனவே சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பின் வண்டி ஓட்டலாம்.

உடனடியாக தூங்குவது;இரவு சாப்பிட்ட பின் உடனடியாகத் தூங்கச் செல்வதால், செரிமானப் பிரச்சனைகள் மட்டுமல்ல, பல வாயுத் தொந்தரவுகளும் ஏற்படக் கூடும். இதனால் உடல் எடையும் தாறுமாறாக அதிகரிக்கும். எனவே, இரவு உணவுக்கும் தூக்கத்துக்கும் இடையே குறைந்தது ஒரு மணி நேர இடைவெளியாவது இருக்க வேண்டும்.......!

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...