ஹெல்மெட் அணியாத வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ் கொடுத்த புதுவித தண்டனை

போலீஸ்காரர்கள் என்றாலே லத்தியால் அடிப்பார்கள். சிறிய தவறை கூட பூதாகரப்படுத்தி மாமூல் வசூலிப்பார்கள் என்ற கருத்து மட்டுமே மக்களிடையே பரவலாக இருந்து வருகின்றது. ஆனால், மனிதர்களில் பல நிறங்கள் இருப்பது போல், போலீசாரிடமும் வியக்கத்தக்க பல குணாம்சங்கள் இருப்பது சில தருணங்களில் நிரூபணம் ஆகியுள்ளது.

அவ்வகையில், சமீபத்தில் ஒரு கண்கண்ட உதாரணமாக சிலிர்க்க வைக்கும் ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் உள்ள கரிம்நகர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

கரிம்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல், சம்பவ தினத்தன்றும் சோதனைச் சாவடி அமைத்து போலீசார் வாகனங்களை சோதனையிட்டு கொண்டுள்ளனர். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் வேகமாக வருகிறார். அவரை போலீசார் மடக்கி பிடிக்கின்றனர்.

அந்த வாலிபரின் ஓட்டுனர் உரிமம், வாகனம் சார்ந்த பிற சான்றிதழ்கள் அனைத்தையும் ஆய்வு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் 'விடாகண்டன்' பாணியில் 'ஹெல்மெட் எங்கே..?' என்று கேட்டு அந்த வாலிபரை திணறடித்தார். என்னென்னவோ சமாதானம் கூறி இன்ஸ்பெடரை சரிகட்ட நினைத்த வாலிபரின் முயற்சி பலிக்காமல் போனது. இறுதியில், பம்மியபடி இன்ஸ்பெக்டருக்கு 'அன்பளிப்பாக' பணத்தை தந்து அங்கிருந்து நழுவ முயற்சிக்கிறார்.

பணம் கைமாறியதும், அந்த வாலிபரின் வாகனத்தை பூட்டி, சாவியை அங்கிருக்கும் ஒரு காவலரிடம் ஒப்படைக்கும் இன்ஸ்பெக்டர், தனது பைக்கை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறார். நேரமும் வீணாகி, வேலைகளும் கெட்டு, பணமும் பறிபோன நிலையில் கையை பிசைந்தபடி அந்த வாலிபர் பேந்தப் பேந்த விழித்தபடி தவித்துப் போய் நிற்கிறார்.

சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு பைக்கில் வரும் அந்த இன்ஸ்பெக்டர் ஒரு அட்டை பெட்டியுடன் இறங்கி அந்த வாலிபரை நெருங்குகிறார். பெட்டிக்குள் இருக்கும் புத்தம் புதிய ஹெல்மெட்டை அந்த வாலிபரின் தலையில் பொருத்துகிறார். ஹெல்மெட் வாங்கிய பில்லை அவரிடம் அளித்து, ஹெல்மெட்டின் விலை இவ்வளவு.., நீ எனக்கு மாமூலாக கொடுத்தது இவ்வளவு.., உன் பணம் போக என் கைப்பணத்தை போட்டு இந்த புதிய ஹெல்மெட்டை வாங்கி வந்திருக்கிறேன்.

இனிமேல் நீ யாரை கண்டும் பயப்பட வேண்டாம். யாருக்கும் மாமூல் கொடுக்கவும் வேண்டாம். உன் உயிரை பாதுகாத்து, உன் குடும்பத்தாரை காப்பாற்ற வேண்டும் என்றால்.., இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டாதே என்று அந்த வாலிபருக்கு அறிவுறை கூறி, தட்டிக் கொடுத்து அந்த இன்ஸ்பெக்டர் வழியனுப்பி வைக்கிறார்.

கரிம்நகர் நெடுஞ்சாலை பகுதியில் வாகன சோதனை நடத்தும் போலீசாரின் செயல்பாடுகள் எப்படி அமைந்துள்ளன? என்பதை கண்காணிக்க ஒருவர் மறைத்து வைத்திருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள இந்த வீடியோ பதிவை 'யூடியூப்' வழியாக இதுவரை சுமார் 2 லட்சம் பேர் பார்த்து வியந்துள்ளனர்.

தமிழகத்தின் எங்காவது ஒரு மூலையில் இதைப் போன்ற ஒரு நேர்மை அதிகாரிகள் இருக்கத்தான் செய்வார்கள் என்று நம்புவோமாக..!

Source: maalaimalar.com
helmet aniyamal vandha vaalibarukku police thandha pudu vidha thandanai, driving without helmet police punishment, police lanjam, Police giving kind punishment a youth driving bile without helmet, vaaganam ottum poludhu thalai kavasam anivadhu avasiyam vilippunarvu padhivu

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...