கடுமையாக உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் பாதிப்புகளை எவ்வாறு தெரிந்துகொள்வது..?
கடுமையாக உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் பாதிப்புகளை எவ்வாறு தெரிந்துகொள்வது..?[Kadumaiyaga udar payirchi seivadhaal undaagum padhippugalai evvaaru arindhukolvadhu]
உடல் எடையைகுறைக்க வேண்டும், பிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஜிம்மில் மாங்கு மாங்கு என நம்மில் பலரும் உடற் பயிற்சியில் ஈடுபடுவது இயல்பான ஒன்றுதான். அது நம் உடலை கட்டுக்கோப்புடன் வைக்க உதவுவதும் உண்மைதான். ஆனால் அதுவே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தில் தான் கொண்டு போய் விடும்.உடற்பயிற்சியில் ஈடுபடும் போது மூச்சை இழுப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் உடற்பயிற்சியில் ஈடுபடாத போது உங்களுக்கு அதிகமாக இழைப்பு ஏற்படுகிறதா? அப்படியானால் பயிற்சியில் நீங்கள் அதிகமாக ஈடுபடுகிறீர்கள் என அர்த்தமாகும். உடற்பயிற்சியின் போது சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டால், 60 நொடிகளுக்குள் உங்களின் இழைப்பு குறைய வேண்டும்.
ஒரு வேளை, உங்களுக்கு இழைப்பு நிற்கவில்லை என்றால், நீங்கள் வருத்திக் கொண்டு பயிற்சியில் ஈடுபடுகிறீர்கள் என அர்த்தமாகும். பாதம் மற்றும் கணுக் கால்களில் வீக்கம், அதிக காய்ச்சல், இருமல், நடுக்கம், மூச்சுத்திணறல் போன்ற சில கூடுதல் அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், அது நெஞ்சு வலிக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
அதனால் உடனே மருத்துவரை அணுகுங்கள். கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு, நெஞ்சு அசௌகரியமாக இருந்தால், அதனை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நெஞ்சு அசௌகரியம் என்பது நெஞ்சு வலி அல்லது மார்பு நெறிப்புக்கான (இதயத்திற்கு செல்லவிருக்கும் இரத்தம் மற்றும் ஆக்சிஜனை குறைக்கும், இதயத்தில் உள்ள இரத்த குழாய்களின் அடைப்பு) முக்கியமான அறிகுறியாகும்.
உடற்பயிற்சியின் போது அல்லது அதற்கு பிறகு வாந்தி எடுக்கலாம். மிக கடுமையாக உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் வாந்தி வரும். அப்படியானால் உங்கள் பயிற்சியின் அளவை நீங்கள் மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும். உடற் பயிற்சி செய்வது குமட்டல் ஏற்பட்டால், உங்களுக்கு நீர்ச்சத்து குறைந்து விட்டது அல்லது வெப்ப சோர்வை அனுபவிக்கிறீர்கள் என அர்த்தமாகும்.
குளிர்ந்த இடத்தில் ஓய்வு எடுப்பதன் மூலம் வெப்ப சோர்வை போக்கலாம். ஆனால் கவனிக்காமல் விட்டு விட்டால், வாதம் வரைக்கும் கொண்டு செல்லும். இதனால் உறுப்புகள் பாதிப்படையலாம், ஏன் மரணம் கூட நிகழலாம். உடம்பு சரியில்லாத போது அதாவது 100.5 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருக்கும் போது, கண்டிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது.
காய்ச்சல் இருக்கும் போது உடற்பயிற்சியில் ஈடுபட்டால், ஆபத்தான கோளாறுகள், நீர்ச் சத்து இழத்தல் மற்றும் அதிக வெப்பம் ஏற்படுவதற்கான இடர்பாடு அதிகம். உடற்பயிற்சியின் போதோ அல்லது அரை மணி நேரம் கழித்தோ மூட்டு வலி ஏற்படலாம். ஆனால் அதை தாண்டி அந்த வலி நீடித்தால், நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மறுநாள் காலையில் நீங்கள் எழுந்திருக்கும் போது, நீங்கள் முந்தைய நாள் செய்த உடற்பயிற்சியினால் மூட்டு வலி நீடித்தால், உடற்பயிற்சியின் போது நீங்கள் அளவுக்கு அதிகமாக உங்களை வருத்தியிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
Udal payirchi, moottu vali, adhiga ilaippu, gym adhiga udal payirchi, excess body fitness in gym is dangerous to health, how to identify excessive work out, vaandhi, adhiga moochu mattrum ilaippu vanguvadhu, moochiraippu, nenju vali, nenju aluttham, sorvu pondra ubadhaigal erppadum, marutthuvarai anuga vendum, Signs You May Be Over Exercising
No comments: