"வலது காலை எடுத்து வைத்து வா - விளக்கம்"

"வலது காலை எடுத்து வைத்து வா - விளக்கம்" [ valadhu kaalai edutthu vaitthu vaa - vilakkam]

புதியதாக திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகிற மணமகளை, வலது காலை எடுத்து வைத்து வா என்று கூறுவதற்கு என்ன காரணம்?

மனிதன் ஒரு சமுதாய விலங்கு. அதாவது மனிதனால் ஒருபோதும் தனிமையில் வாழ முடியாது. அப்படி வாழ்வதும் வாழ நினைப்பதும் விதிவிலக்காக கொள்ளலாமே தவிர விதியாக கொள்ள இயலாது. சமூகமாக கூடி வாழ்வதற்காக தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான்.

பத்துபேர் இருக்கிற ஒரு சபையில் எல்லோருக்குமான கட்டுப்பாடு உண்டு. தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் நாலுபேர் முன்னால் நாம் மட்டும் தனித்த ஒரு செயலை செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அப்படி செய்வதனால் பொது அமைதி கெட்டுவிடும் இதனால் தான் நமது முன்னோர்கள் நீதியை, பொது நீதி, தனி நீதி என்று இரு பகுதிகளாக பிரித்து நமக்கு தந்தார்கள்.

"உலகப்பொதுமறை" தந்த வள்ளுவன் கூட, உலகத்தவரோடு ஒட்டி உறவாடி செல்லாதவன், பலவிதமான கல்வியை கற்றிருந்தாலும் பயனில்லை என்று கூறுகிறார். நாலுபேர் ஒரு பாதையில் போகும் போது நாமும் அதை கடைபிடிக்க வேண்டும் தனிபாதை போட நினைத்தால் தடுமாற வேண்டிய சூழல் வரும்.

நாம் வாழுகிற இந்த பூமி வலது புறமாகவே சுற்றுகிறது. இதனோடு சேர்ந்து மற்ற கிரகங்களும் வலது முகமாக தான் நகர்கின்றன. நீனும் அதைபோலவே உலகம் போகிற பாதையில் சேர்ந்து இணைந்து போக வேண்டும் என்பதை நினைவுபடுத்தி வலியுறுத்தி காட்டுவதற்காகவே வலது காலை எடுத்து வைத்து வா என்று சொன்னார்கள்.


"Valathu kaalai edutthu vaitthu vaa - vilakkam"  - Newly married bride coming over to the house, keeping the right leg, why?

putiyataaka tirumanam mudintu veettukku varukira manamakalai, valatu kaalai edutthu vaitthu vaa endru kooruvatarku enna kaaranam?

Manitan oru samutaaya vilanku. Ataavatu manitanaal orupotum tanimaiyil vaala mudiyaatu. Appadi vaalvatum vaala ninaippatum vitivilakkaaka kollalaame thavira vitiyaaka kolla iyalaatu. samookamaaka koodi vaalvatarkaaka taan manitan padaikkappattirukkiraan.

Patthuper irukkira oru sapaiyil ellorukkumaana kattuppaadu undu. Tanimanita sutantiram endra peyaril naaluper munnaal naam mattum tanitta oru seyalai seyya mudiyaatu, seyyavum koodaatu. Appadi seyvatanaal potu amaiti kettuvidum itanaal taan namatu munnorkal neetiyai, potu neeti, tani neeti endru iru pakutikalaaka piritthu namakku tantaarkal.

"Ulakappotumarai" tanta valluvan kooda, ulakattavarodu otti uravaadi sellaatavan, palavitamaana kalviyai karriruntaalum payanillai endru koorukiraar. Naaluper oru paataiyil pokum potu naamum atai kadaipidikka vendum tanipaatai poda ninaittaal tadumaara vendiya soolal varum.

Naam vaalukira inta poomi valatu puramaakave surrukiratu. Itanodu serntu marra kirakankalum valatu mukamaaka taan nakarkindrana. Neenum ataipolave ulakam pokira paataiyil serntu inaintu poka vendum enpatai ninaivupadutti valiyurutti kaattuvatarkaakave valatu kaalai edutthu vaitthu vaa endru sonnaarkal.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...