KFC கோழிக்கு பதிலாக வறுத்த எலி? - பேஸ்புக்கில் வைரலாக பரவும் படம்

சமீபத்தில் KFC-யில் கோழிக்கு பதிலாக வறுத்த எலி பரிமாறப்பட்டதாக பேஸ்புக்கில் வைரலாக எலி வடிவிலான ஒரு படம் பரவி வருகிறது.
KFC fried rat facebook viral image

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள KFC உணவகத்தில் டேவோர்ஸ் டிக்ஸன் என்பவர் வறுத்த கோழி கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு வந்த கோழியோ நன்றாக வறுக்கப்பட்ட எலியை போன்று இருந்துள்ளது. இது பற்றி உணவகத்தின் மேலாளரிடம் அவர் விளக்கம் கேட்டதாகவும் மேலாளரும் அதை எலி என்று ஒத்துக்கொண்டதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் டிக்ஸன்.

அந்த புகைப் படத்தை இது வரை ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் தங்களது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ஆனால் இது பற்றி விளக்கம் அளித்துள்ள கே.எப்.சி. ”இது பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் அவரது குற்றசாட்டை நிரூபிக்கும் ஆதாரஙகள் எதுவும் இது வரை கிடைக்கவில்லை. எங்களுக்கு அனுப்பபடும் கோழிகள் பல வடிவங்களில் வருவது வாடிக்கையானது தான். இந்த குற்றச்சாட்டை வைத்துள்ள டேவோர்ஸ் டிக்ஸனை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். ஆனால் அவர் ஒத்துழைக்க மறுக்கிறார்” என தெkரிவித்துள்ளது.

டேவோர்ஸ் டிக்ஸன் இது வரை அதிகாரப்பூர்வமாக எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் அதை எலி என்றுதான் சொல்வார்களே தவிர ஒரு போதும் கோழி என்று ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயம்.

அதிகமாக பகிருங்கள்.... Share to Your Friends..!!

KFC bucket rat instead of bucket chicken, Devorise Dixon facebook post about KFC fried rat delivery, don't eat in KFC, unhealthy non-veg, varuttha kozhikku pahilaaga varuttha eliyai koduttha KFC food chain,

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...