இ-பே வலைத்தளத்தில் சூரியனை 'பிளாட்' போட்டு விற்கும் பெண்..!
[Ebay valaithalatthil Sooriyanai plot pottu vinodha pen] அரசு நிலத்தை ஆக்கிரமித்து, 'பிளாட்' போட்டு விற்பவர்களை எல்லாம்
துாக்கி சாப்பிட்டு விட்டார், ஸ்பெயினைச் சேர்ந்த, மரியா துரன், 54. இவர்,
கடந்த ஐந்தாண்டுகளாக, சூரியன் தனக்குத் தான் சொந்தம் என்று கூறி வருகிறார்.
அது மட்டுமா, 'நோட்டரி பப்ளிக்' இடம், தன் பெயரில் சூரியனை பதிவு செய்து
கொண்டதற்கான ஆவணத்தையும் காட்டுகிறார்.
இது போதா தென்று, சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிப்போர், அதற்கான பணத்தை தனக்கு தராவிட்டால், வழக்கு தொடரப் போவதாகவும் மிரட்டுகிறார். இதற்கெல்லாம், 'கிளைமேக்ஸ்' போல், சூரியனை, 'பிளாட்' போட்டு விற்கத் துவங்கியுள்ளார் இவர். ஒரு சதுர மீட்டர் பிளாட்,
70 ரூபாய் என்ற இவரது விளம்பரம், இ-பே வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது.இரண்டு ஆண்டுகளாக இதை கவனிக்காமல், 'கோட்டை' விட்ட, இ-பே, தற்போது விழித்துக் கொண்டு, அந்த விளம்பரத்தை அகற்றியதுடன், மரியாவின் வலைதளக் கணக்கையும் முடக்கியது. விடுவாரா மரியா? சூரியனையே, 'பிளாட்' போட்டு விற்பவர் ஆயிற்றே?
உடனே, இ-பே மீது, 7.50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, இ-பே, மரியாவுடன் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து கொள்ள முன் வந்தது.அதை நிராகரித்து விட்ட, மரியா, தற்போது, தன் வலைதளம் மூலம், சூரியனை விற்பனை, செய்து வருகிறார். கோள் அல்லது நட்சத்திரத்தை, எந்த ஒரு நாடும் சொந்தம் கொண்டாட முடியாது என்கிறது, சர்வதேச ஒப்பந்தம். 'இந்த ஒப்பந்தம், தனி நபரான என்னை கட்டுப்படுத்தாது' என, மரியா கூறுகிறார். இவரது சூரியனில், பலர், 'பிளாட்' வாங்கிப் போட்டிருக்கின்றனராம். 'தவணையில் கூட விற்பனை உண்டு' என்கிறார் மரியா!
**மக்கள் மாட்டு மடையர்களாக இருக்கும்வரை ஆகாயத்தையே பிளாட் போட்டு விற்று விடுவான்கள்.
**இதை நம்பி சூரியனில் பிளாட் வாங்கிய என்னவென்று சொல்வது?
sooriyanai plot pottu virkkum vinodha pen, vinodha tamil seidhigal, latest news in tamil, sooriya sakthi, owner of solar power,

No comments: