12 ரூபாய்க்கு ரூ.2 லட்சம் தரும் விபத்து கவரேஜ் ஆயுள் காப்பீட்டு பாலிசி

12 rubaikku 2 latcham tharm vibatthu coverage ayul kaappeettu thittam - பிரதமர் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் 12 ரூபாய்க்கு ரூ.2 லட்சம் கவரேஜ்!

2 lakh death coverage for 12 rupees insurance policy by narendra Modi govt

பிரதமர் நரேந்திர மோடி மே 9 ஆம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையும், பிரதான்மந்திரி ஜீவன் ஜோதிபீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் தொடங்கி வைக்கப் போகிறார். இந்த இரண்டு திட்டங்களிலும் யார் யார் சேரலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பிரீமியம் எப்படி வசூலிக்கப்படும், க்ளெய்ம் எப்படி கிடைக்கும், எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்று விவரிக்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினி.


யார் இந்தத் திட்டங்களில் சேரலாம்?
‘‘இந்தத் திட்டத்தில் இந்தியாவில் வங்கிக் கணக்குள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அவர் ஏழை, பணக்காரர், வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர் என்று எந்தப் பாகுபாடுமின்றி இந்தத் திட்டத்த்தில் இணையலாம். இதில் இணைபவர்கள் 18 - 70 வயது டையவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 70 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்.

அதே போல், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணைபவர் 18 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மட்டும் 50 வயது பூர்த்தி அடையாதவர் தன் 50-வது வயதில் விண்ணப்பித்தால், அடுத்த 5 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் இருக்கலாம். இந்தச் சலுகை திட்டம் தொடங்கப்படுகிற 2015-ம் ஆண்டு மட்டுமே கிடைக்கும். ஒருவர் மேற் கூறிய இரண்டு திட்டத்திலும் இணையலாம். தனியாக வேறு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்களும் கூட இந்தத் திட்டத்தில் இணையலாம்.

எப்போது சேரலாம்?

2015 மே மாதத்துக்குள் விண்ணப்பித்தால் யார் வேண்டுமானாலும், எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் இன்றித் திட்டத்தில் இணையலாம். மே 2015-க்குப்பின் அதாவது, ஜூன் 1 (2015) முதல் ஆகஸ்ட் 31 (2015) வரை திட்டத்தில் இணைபவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் வழங்க வேண்டி இருக்கும்.

என்ன வேண்டும்?

இந்தத் திட்டத்தில் இணையக் கட்டாயம் ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கு வேண்டும். மற்ற எந்த வங்கிக் கணக்கை வைத்தும் இந்த இன்ஷூரன்ஸ் திட்டங்களில் இணைய முடியாது. ஒருவர் ஒரு வங்கிக் கணக்கின் மூலம் ஒரு முறைதான் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் இந்தத் திட்டத்துக்கான சேவைகளை வழங்குகின்றன. ஆனாலும் சில வங்கிகள் இந்தத் திட்டத்தில் இணையாமல் இருக்கின்றன.

விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும்?

இந்த திட்டத்தை பெரும்பான்மையான அரசு மற்றும் தனியார் துறை நிதி நிறுவனங்களான வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இதற்கான விண்ணப்பங்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சென்று சமர்பித்தால் போதுமானது.

பிரீமியம் எப்படிச் செலுத்த வேண்டும்?

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தில் ஆண்டுக்கு 12 ரூபாய்ப் பிரீமியமாக வசூலிக்கப்படும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்துக்கு ஆண்டுக்கு 330 ரூபாய்ப் பிரீமியமாக வசூலிக்கப்படும்.

இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஆட்டொடெபிட் என்கிற முறையில் வங்கி சேமிப்பு கணிக்கிலிருந்து பிரீமியம் வசூலிக்கப்படும். விண்ணப்பத்திலேயே ஆட்டோ டெபிட் செய்யச் சம்மதிப்பதாக ஒரு டிக்ளரேஷன் இருக்கும். எனவே, விண்ணப்பத்தைப் பூத்தி செய்து தந்தாலே வங்கிச் சேமிப்பு கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் செய்ய வங்கிக்கு அனுமதி அளித்தது போல தான். 31 மே 2015 வரை விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து வங்கிகளில் சமர்பிக்கும்போ து ஒரு ரசீது வழங்கப்படும். இது நீங்கள் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். ஆனால் 01 ஜீன் 2015-ல் இருந்துதான் வங்கிக் கணக்குகளின் மூலம் பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்யப்படும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிரீமியமாகச் செலுத்தப்பட்டபின் வங்கி, ரசீதை வழங்கும். இந்த ரசீது தான் நீங்கள் பிரீமியம் செலுத்தியதற்கான ஒரே ஆதாரம்.

ரெனீவல் செய்வது எப்படி?

நீங்கள் பூர்த்திச் செய்யும் விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்களைக் கேட்கப் பட்டிருக்கும். இந்த வருடம் விண்ணப்பத்தைக் கொடுத்துத் திட்டத்தில் இணைந்தபின், அடுத்த வருடத்திலிருந்து ஜூன் 1-ம் தேதிக்கு முன் வங்கிகள், சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் பிரீமியத்தை ஆட்டோ டெபிட் செய்து அதற்கான ரசீதை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும்.

யார் க்ளெய்ம் வழங்குவார்கள்?

இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துத் தரப்பு வங்கிகளோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உதாரணமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஐஓபி மூலம் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தால், அவர் எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம்தான் க்ளெய்ம் சார்ந்த விவரங்களைப் பெறமுடியும். அதுபோல், நீங்கள் எந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி, இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருக்கிறீர்களோ, அந்த வங்கி எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறதோ, அந்த நிறுவனம் உங்களுக்கு க்ளெய்ம் வழங்கும்.
 
எதற்கு, எவ்வளவு க்ளெம்?


2015 மே மாதம் விண்ணப்பித்து விட்டு மே மாதமே விபத்து ஏற்பட்டால் க்ளெய்ம் கிடைக்காது. இந்தத் திட்டம் 2015 ஜூன் மாதத்திலிருந்துதான் துவங்குகிறது. எனவே, 2015 ஜூனிலிருந்துதான் க்ளெய்ம் கிடைக்கும். இந்தத் திட்டத்துக்கு எந்தக் காத்திருப்பு காலமும் கிடையாது என்பதே இதன் முக்கிய அம்சம்.

ஜீவன் ஜோதி திட்டத்தில் இணைந்த ஒருவர் எந்த வகையில் இறந்தாலும் அவருக்கு இன்ஷூரன்ஸின் மூலம் முழுத்தொகையும் க்ளெய்மாகக் கிடைக்கும்.

இதற்கு இறந்தவர் பிரீமியம் செலுத்தியதற்கான ரசீது, அவரின் இறப்புச் சான்றிதழ் போன்றவைகளை நீங்கள் எந்த வங்கியின் கணக்கை வைத்து இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கியில் சமர்பிக்க வேண்டும். நாம் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்திலேயே நாமினியின் பெயரையும், அவர்கள் நமக்கு என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டி இருக்கும். இறந்தவர் குறிப்பிட்ட நாமினிக்கு டிடி மூலம் க்ளெய்ம் தொகை அனுப்பப்படும். உங்கள் வங்கிக் கணக்கு மூலம் உங்கள் இருப்பிட முகவரி வங்கிக்கு தெரியும் என்பதால் தனியாக எந்தக் கூடுதல் விவரங்களும் தரத் தேவை இல்லை.

சுரக்‌ஷா இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் இறந்துவிட்டால் அல்லது விபத்தில் சிக்கி நிரந்தர ஊனம் (Full disailment), அதாவது இரண்டு கை அல்லது இரண்டு கால் அல்லது இரண்டு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால் 2 லட்சம் ரூபாய் முழுமையாக க்ளெய்ம் கிடைக்கும். விபத்தில் சிக்கி பகுதி ஊனம் (Partial disailment) அதாவது, ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால், ஒரு லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் பெற காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), போஸ்ட் மார்டம் அறிக்கை போன்றவைகளை வங்கியிடம் சமர்பிக்க வேண்டும். மற்றபடி சட்டரீதியான விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, ஒட்டுநர் உரிமம் சரியாக இருக்க வேண்டும்; மது அருந்தி இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட விபத்துக்களுக்கு (Self Injury) க்ளெய்ம் கிடைக்காது.

திட்டத்தின் தொடர்ச்சி!

ஒரு திட்டத்திலிருந்து ஒருமுறை க்ளெய்ம் கிடைத்துவிட்டால், அடுத்த வருடம் தொடர்ந்து பிரீமியம் செலுத்துவதன் மூலம் திட்டம் தொடரும். எனவே, மீண்டும் புதிதாக விண்ணப்பம் கொடுத்துத் திட்டத்தில் இணைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

ஒருவேளை இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்த வங்கிக் கணக்கை கையாள முடியாமல் போனால், எந்த வருடத்துக்குப் பிரீமியம் செலுத்தப்பட்டிருக்கிறதோ, அந்த வருடம் முழுவதுமாக (அதாவது, ஜூன் 1 முதல் மே வரை 31) அந்த வங்கிக் கணக்கு மூலம் க்ளெய்ம் கிடைக்கும். மீண்டும் வேறு ஒரு வங்கிக் கணக்கு மூலம் புதிதாக விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து இந்த இன்ஷூரன்ஸ் திட்டங்களில் இணையலாம்.

எப்போது திட்டம் காலாவதியாகும்?

நீங்கள் எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைகிறீர்களோ, அதே வங்கியில்தான் திட்டத்தைத் தொடர வேண்டும். பிரீமியத்தைக் கட்டவில்லை என்றால் நீங்கள் இணைந்த திட்டம் ரத்துச் செய்யப்படும்.

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தில் உள்ளவர்கள் 70 வயதை கடக்கும்போதும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இருப்பவர்கள் 50 வயதை கடக்கும்போதும் பாலிசிகள் காலாவதியாகிவிடும்” என்றார் இந்திரா பத்மினி.

குறைந்த பிரீமியத்தில் கூடுதல் பலன் தரும் இந்தத் திட்டத்தில் அனைவரும் சேரலாமே!

- மு.சா.கெளதமன்

2 lakh death coverage for 12 rupees insurance policy by narendra Modi govt, 12 rubaikku 2 latcham tharm vibatthu coverage ayul kaappeettu thittam - பிரதமர் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் 12 ரூபாய்க்கு ரூ.2 லட்சம் கவரேஜ்!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...