ஆடைகளை எப்படி அணியவேண்டும்.. ??

Aadaigalai eppadi aniya vendum..?

ஆள் பாதி... ஆடை பாதி என்பது பழமொழி மட்டும்தானா....... 

.
Aadaigalai aniyum muraigal, pudavai design
.இல்லை அதில் அர்த்தமும் உண்டு. இப்போ தெல்லாம் ஆடைதான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது. ஒருவரை பார்க்கும் போது அவர் அணிந்திருக்கும் ஆடையை வைத்தே நாம் அவரை மதிப்பிடுகிறோம்.

சில பெண்கள் அணிந்துள்ள ஆடைகளைப் பார்க்கும் போது சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அது புடைவையாக இருந்தாலும்... அல்லது சுடிதார், ஜீன்ஸ் போன்ற மொடர்ன் உடைகளாக இருந்தாலும் உடலமைப்பு சரியாக இல்லாத போது அது பொருத்தமாக இருக்காது.

அவர வருக்குப் பொருத்தமான ஆடைகளை பொருத்தமான முறையில் அணிந்தால் கண்டிப்பாக எல்லோரையும் கவரலாம். அதாவது கந்தையான ஆடையாக இருந்தாலும் அதை துவைத்து, அயர்ன் செய்து அணிந்தால் அழகாகவே இருக்கும்.

நிறத்திற்கும், தோற்றத்திற்கும், உயரத் திற்கும் பருமனுக்கும் மற்றும் பருவத்திற்கும் தகுந்த படி ஆடைகளை அணிந்தால் கண்டிப்பாக நாம் அழகாகத் தெரிவோம். ஒல்லியும் உயரமுமாக இருக்கும் பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட உடைகளை அணியக் கூடாது. முடியை கழுத்துக்கு மேல் தூக்கி முடி அலங்காரம் செய்யவும் கூடாது. சிறிய போர்டர் புடைவை அல்லது நீள வாக்கில் பூவேலை செய்த சுடிதார் அணிய வேண் டாம்.
சற்று பெரிய பூக்கள் போட்ட பளிச் சென்ற புடைவைகள் அல்லது சுடிதாரும் போட்டமும், பூப்போட்ட சுடிதாரும் அணியலாம். நீளமான அகலமான டிசைன் எதுவும் இல்லாத பிளைன் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கறுப்பு நிறங்களில் அணியலாம். உயரமான ஒல்லியான பெண்கள் கறுப்பு அல்லது மாநிறமாக உள்ளவர்கள் அழுத்தமான நிறங்களில் ஆடைகள் தேர்ந்தெடுக்கக் கூடாது. அப்படியே தேர்ந் தெடுத்தாலும் அடர்த்தி மற்றும் வெளிர் நிறங்கள் மாறி மாறி வருவது போல் இருந்தால் நன்றாக இருக்கும்.

அதில் ஏதாவது ஒரு நிறத்தில் முடிந்தால் ஆடையில் உள்ள லைட் நிறப் ப்ளவுசோ அல்லது துப்பட்டாவோ அணிய வேண்டும். உயரமானவர்கள் கழுத்தில் நீளமாகத் தொங்கும் ஆபரணங்கள் அணியாமல் கழுத்தை ஒட்டி இருக்கும் சிறிய நெக்லஸ் அணியலாம். நல்ல நிறமான சிகப்பாக இருப்பவர்கள், குட்டையாக... ஒல்லியாக இருந்தால் பிளைனாக... டிசைன் இல்லாத நிறத்தில் ஆடை அணிய வேண்டாம்.

அப்படி புடைவை அணியும் போது ஜாக்கெட் அடர்த்தியான நிறத்தில் டிசைன்களுடன் இருக்கலாம். கருப்பாக குள்ளமாக இருப்பவர்கள் மெல்லிய சரிகை போர்டர் வைத்தோ அல்லது மெல்லிய போர்டருடனோ சேலை அணியலாம். பெரும்பாலும் போர்டரும், சேலையின் தலைப்பும் உள்ள புடைவைகளை தவிர்த் திட வேண்டும். அழுத்தமான நிறத்தில் உள்ள சேலைகளை கறுப்பாக இருப்ப வர்கள் அணிய வேண்டாம். அப்படி அணியும் போது அதில் சிறிய வெளிர் நிறத்தில் பூக்கள் அல்லது புள்ளிகள் இருந்தால் நன்றாக இருக்கும். குண்டாக இருப்பவர்கள் உடலுடன் ஒட்டியவாறு ஆடைகளை அணியக் கூடாது.

டொப்பும், பொட்டமும் வெவ் வேறு நிறத்தில் இருக்குமாறு சுடிதார் அணியலாம். துப்பட்டாவை தவிர்க்கலாம். அல்லது கணுக்கால் வரை மிடி அணிந்து நீண்ட கைகளை உடைய டொப்ஸை இன் செய்து அணியலாம். மிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து அதில் அடி நுனி வரை பூவேலை அமைந்திருந்தால் தோற் றத்தை சிறிது உயரமாகக் காட்டும்.

ஆடையும் அழகாக இருக்கும். முடிந்த அளவு உயரமான செருப்பு அணிந்து கொள்ள வேண்டும். குட்டையான கழுத்து இருந்தால், அதை இறுக்கமாக சுற்றும் பட்டையான அணிகலன்கள் அணிந்தால் நன்றாக இருக்காது. நெக்லெஸ் கூட சிறிது தளர மார்பில் படும்படியாக அணியலாம். மெல்லிய நீளமான சங்கிலி அணிய லாம்.

கைகளில் மெல்லிய கம்பிகளாக மோதிரங்கள் அணியலாம். காதில் நீண்டு தொங்கும் காதணிகள் அணியலாம். காதைத் தாண்டி முடியில் மாட்டும் நீள மாட்டல்களை அணியலாம். காதைச் சுற்றிலும் துளையிட்டு நிறைய ஆபரணங்களை அணியலாம். அவை தட்டையாக அகலமாக இல்லாமல் இருப்பது அவசியம். ஒல்லியாக இருப்பவர்கள் சுருக்கு வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாகத் தெரிவார்கள். இறுகிய உடைகளையும் தவிர்க்க வேண்டும். பேண்ட், டீ ஷேர்ட் அணிபவர்கள் டீ ஷேர்ட்டை இன் செய்யாமல் அணியவும். பேண்ட், ஷேர்ட் அணிபவர்கள் ஷேர்ட்டில் டிசைன்கள் இருந்தால் இன்னும் அழகாகக் காணப்படுவார்கள்.

by Gayathry
 
Aadaigalai aniyum muraigal, pudavai design, kuttaiyaaga irukkiren appadi irukka vendum, nettaiyaaga iruppavargal azhagaaga irukka, aabaranangal aniya vendum, t-shirt aniyum vidham, anigalangal, seruppu, necklace, chain, pant, chudidhaar, saree, jacket, niram, karuppu, kattam potta sattai, kodu potta sattai, irukkamaaga anivadhu, thalarndha aadai anivadhu, shirt design, Aadaigalai eppadi anivadhu, udai udutthum muraigal, maa niram, karuppu, vellai niratthirkku ettra udai, how to select best dress, how to dress for best fit and neat look, wear best fit dress, tips and ideas for beautiful look

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...