அகத்திக்கீரை பயன்கள்..Agatthi keerai payangal:

Agatthi keerai payangal
Agatthi keerai payangal: அகத்தி என்றாலே முதன்மை, முக்கிய ம் என்று பொருளாகு ம். நமது அகத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதால் இது அகத்தி என்று பெயர் பெற்றுள்ளதா ம். தமிழ்நாட்டில் மார்கழி மாத ம் வைகுண்ட ஏகாதசி விரத ம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி அன்று இறைவனை வணங்கி உண்ணு ம் உணவில் அகத்திக்கீரை முக்கிய உணவாக இட ம் பெறுகிறது. இது இந்தியா முழுவது ம் பயிரிடப்படுகிறது. பெரு ம்பாலு ம் அகத்திச்செடி நீர் தாங்கிய பூமிகளில் பயிர் செய்யப்படுகிறது. சத்துக்கள் அகத்திக் கீரையில் 73 சதவிகித ம் நீரு ம், 8.4 சதவிகித ம் புரதமு ம், 1.4 சதவிகித ம் கொழுப்பு ம், 2.1 சதவிகித ம் தாது உப்புகளு ம் இருக்கின்றன. இதில் 2.2 சதவிகித ம் நார்சத்து ம் இருக்கிறது. மாவுச்சத்து 11.8 சதவிகிதமு ம் உள்ளது. சுண்ணா ம்புச்சத்து இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்று ம் எலு ம்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
இக்கீரை உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகு ம். 100 கிரா ம் கீரையில், 9 ஆயிர ம் உயிர் சத்தான வைட்டமின்கள் உள்ளது. தயாமின் சத்து 0.21 மில்லி கிராமு ம், ரைபோ ம் ஃப்ளோவின் சத்து 0.09 மில்லிகிராமு ம், நிக்கோடினிக் அமில ம் 1.2 மில்லிகிராமு ம், வைட்டமின் ‘சி‘ 169 மில்லி கிரா ம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பயன்கள்
அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்து ம் மருந்தாக பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்து ம் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்று ம் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரையை சாப்பிடுவதன் மூல ம் குணமாகு ம்.

மருத்துவ பயன்கள்
அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கு ம்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கு ம். ரத்த பித்த ம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலு ம்.
பித்த ம்: அகத்திக்கீரையை வார ம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படு ம் வெப்ப ம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படு ம் பித்த ம் ஆகியவை தீரு ம்.

அரிப்பு: அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைகளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி அதனை வடிகட்டி 100 மி.லி. அளவு என 2 வேளை குடித்து வர காய்ச்சல், கை கால், மார்பு, உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அ ம்மைக் காய்ச்சல் குணமாகு ம்.

காய்ச்சல்: இக்கீரையைப் பிழிந்து அதன் சாறை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கு ம். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷ ம் போன்றவை நீங்கு ம்.

பால் சுரக்க: இக்கீரையில் சுண்ணா ம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது. பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கு ம். இக்கீரை சமைக்கு ம்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டு ம். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்று ம் சக்தி இக்கீரைக்கு உண்டு. இதன்மூல ம் மலச்சிக்கல் நீங்கு ம். குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை 5க்கு ஒரு பங்கு வீத ம் தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையு ம்.

காயம்: அகத்தி கீரையை வேக வைத்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறு ம். அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகு ம்.

அல்சர்: அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னு ம் நோயைக் குணப்படுத்து ம். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமு ம்  1 வேளை குடிக்கலா ம்.

கால்வெடிப்பு: அகத்தி கீரையையு ம், மருதாணி இலையையு ம் சம அளவு எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையு ம்.

தேமல்: உட ம்பில் காணப்படு ம் தேமலுக்கு அகத்தி கீரையின் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையு ம். அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடு ம்.

குறிப்பு: அகத்திக்கீரை மருந்து முறிவு கீரையாகு ம். பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையை சாப்பிடக்கூடாது. மேலு ம் இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த ம் கெட்டுப்போகு ம் வாய்ப்புண்டு. இதனால் சொறி, சிரங்கு ம் தோன்றலா ம். ரத்த ம் குறைந்து ரத்த சோகை ஏற்பட்டு, வயிற்று வலியு ம் உண்டாகு ம். இக்கீரையை வாரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால், நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலா ம்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...