குழந்தைகளுக்கு எண்ணெய் குளியல்( Kulandhaigalukku ennai kuliyal)

நமக்கு வரும் பல நோய்களுக்கு இந்த எண்ணெய்க் குளியலை மறந்ததே முக்கியக் காரணமாகும். நம்மைவிடுங்கள். நமது குழந்தைகளுக்காவது எண்ணெய்க் குளியலை பழக்கப்படுத்துவோம்.
ஒரு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கான எண்ணெயை (பேபி ஆயில்) வாரத்தில் ஒரு நாளாவது உடல் முழுக்கத் தடவி விட்டு வெது வெதுப்பான நீரில் குளிப்பாட்டுங்கள்.
ஒரு வயதுக்கு மேலிருக்கும் குழந்தைகளுக்கு நல்லெண்ணை வாங்கி வந்து, சனிக்கிழமைகளில் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊற விட்டு பின்னர் குளிக்கவைக்கலாம்.
முதல் இரண்டு மூன்று வாரங்களுக்கு நல்லெண்ணை தேய்த்ததும் குளிக்க வைத்து விடுங்கள். புதிது என்பதால் உடலுக்கு ஏற்றுக்கொள்ள சில நாள் பிடிக்கும்.
நல்லெண்ணையை புருவத்தில் தடவ மறக்க வேண்டாம். 4வது வாரத்தில் இருந்து 10 நிமிடம் முதல் ஊற விட்டுக் குளிப்பாட்டுங்கள்.
குழந்தைகளுக்கு எண்ணெய் குளியல்( Kulandhaigalukku ennai kuliyal)
No comments: