ஒரு க்ளாஸ் கேரட் ஜூஸ் தினமும் குடித்தல் கிடைக்கும் நன்மைகள்

Migavum satthu niraindha saaru carrot saaru( Carrot juice) - மிகவும் சத்து நிறைந்த சாறு எது.. தெரியுமா?


satthu niraindha saaru carrot saaru Carrot juice benefitsமிகவும் சத்தான சாறு காரட்தான்! மலச் சிக்கலை உடனடியாக அகற்றும். காரட் சாறு தயாரிக்கும் போது எலுமிச்சம் பழம், புதினாக் கீரை சேர்த்து தயாரித்து அருந்தினால் மலச் சிக்கல் அகலும். இந்தச் சாற்றில் உப்பைச் சேர்க்கக் கூடாது.

படிக்கும் போது கண்களில் எரிச்சல் உள்ளவர்கள், கண்களில் பலவீனம் உள்ளவர்கள், எழுத்தாளர்கள் தினமும் காரட் சாறு அருந்தி வந்தால் ‘விழி லென்ஸ் பவர்’ குறைவது தடுக்கப்படும். அதில் அதிக அளவு உள்ள Vitamin A, கண்களை தளர்ச்சி, பலவீனம் முதலியவை அண்டாமல் பார்த்துக் கொள்கிறது.

health benefits of drinking a glass of carrot juice daily
முட்டையில் உள்ளது போலவே 'B' குரூப் வைட்டமின்கள் காரட் சாரில் அதிகம் உள்ளது. இந்தச் சாறு எளிதில் செரிமானமாகும். நெஞ்சு எரிச்சல் உள்ளவர்கள் காரட் சாறு பருகும் பழக்கத்தை தினமும் பின்பற்ற வேண்டும். காரட் சாறு வயிற்றை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வதால் குடல்வால் வியாதி வராது. கல்லீரல், வயிறு முதலியவற்றில் கற்கள் அல்லது புண்கள் இருந்தால் காரட் சாறு அருமருந்து.

இதயத் துடிப்பைச் சீராக வைத்துக் கொள்ள காரட் சாறு உதவும். இரத்தம் கெட்டியாகி உறைந்து விடாமல் கவனமாகக் கண்காணித்து, இதய அடைப்பில் இருந்து முழு விடுதலை அளிக்கும். இதனால் வாழ்நாள் அதிகரிக்கும்.

 இரத்தப் புற்று நோயாளிகள் தினமும் காரட் சாறு அருந்த வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்.

ஓரளவு சதைப்பிடிப்புடன் வளர விரும்பும் ஒல்லியான மற்றும் இரத்த சோகையுள்ளவர்கள் தினசரி அருந்த வேண்டிய சாறு,

இரத்தத்தில் உள்ள தேவை இல்லாத யூரிக் அமிலத்தை காரட் சாறு கட்டுப் படுத்துகிறது. இதனால், மூட்டு வீக்கம் மற்றும் வாத நோயாளிகள் வலி யிலிருந்து முழுவதும் குணம் பெறுகிறார்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக சக்தி அதிகரிக்கவும், புத்தி கூர்மை உண்டாகவும், ஏழு எட்டு பாதாம் பருப்புகளுடன் காரட் சாறு அருந்தி வந்தால் போதும், மூளை விழிப்புடன் இருக்கும்.

மஞ்சள்காமாலை நோயாளிகள் விரைந்து குணமாக தினமும் அருந்தும் காரட் சாறு உதவுகிறது.

வயிற்றில் உள்ள பூச்சிகளை மருந்தின்றி அப்புறப்படுத்தவும், வறண்ட தோல் பளபளப்பாக மாறவும், பருக்கள் மருந்தின்றி மறைந்து முகம் சிவப்பாக மாறவும், நெஞ்சு வலி, முதுகு வலி குணமாகவும், மாதவிலக்குக் காலம் சரியான இடைவெளியின்படி ஏற்படவும் தினமும் ஒரு டம்ளர் காரட் சாறு அருந்தி வரவேண்டும்.

தாய்ப்பால் தரமாக இருக்கவும், தொடர்ந்து கிடைக்கவும் காரட் சாறு அருந்த வேண்டும். குறைவான செலவில் கிடைக்கும் சத்துணவு இது.

குழந்தை இல்லாத தம்பதிகள் தினமும் அருந்தும் காரட் ஜுஸில் உள்ள வைட்டமின் ‘ஈ’யால் குழந்தை பாக்கியம் அடைய வாய்ப்பு உண்டு.

 உருளைக் கிழங்கில் உள்ளதை விட 6 மடங்கு அதிகமான சுண்ணாம்புச் சத்து காரட்டில் இருக்கிறது. இந்தக் கால்சியம் எளிதில் ஜீரணிக்கப்படுவதால், எலும்புகள் உறுதி பெறுகின்றன. பெண்கள் எலும்பு மெலிந்து உடைந்து போகும் நோயில் இருந்து தப்பிக்கலாம்.

Tocokinin என்ற ஹார்மோன் காரட்டில் இருக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் போல் இருந்து உதவுகிறது. எனவே, இவர்களும் காரட்டின் சாறு அருந்தலாம்.

இவ்வளவு நன்மைகள் கொண்ட காரட் ஜுஸை தினமும் ஒரு கிளாஸ் அருந்தினாலே போதும். அதிகத்தடவை அருந்தினால் மூலத்தொந்தரவுகள் வரவும் வாய்ப்புண்டு.  புதிய காரட்டுகளை உடனுக்குடன் மிக்ஸியில் அரைத்துத் தயாரித்து அருந்துவதே நல்லது.

ஒரு க்ளாஸ் கேரட் ஜூஸ் தினமும் குடித்தல் கிடைக்கும் நன்மைகள்..!

Migavum satthu niraindha saaru carrot saaru( Carrot juice), Importance of carrot juice, benefits of carrot juice in tamil, carrot juice nanmaigal, maruthuva kundhangal, Payangal, Vitamin a, vitamin b, vitamin e adhigam ulladhu  carrot saatril. oru glass thinamum carrot juice kuditthal kidaikkum nanmaigal

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...