உடல் பருக்க காரணங்களாக இருப்பவை எவை..?

Udal edai parukka kaaranagal
உடல் பருக்க காரணங்களாக இருப்பவை எவை..?

1. வயது(vayadhu): உடல் பருமன் எந்த வயதிலும் ஏற்படலாம். பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க உடல் பருமன் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது. அதிக பருமர்கள் 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவில்தான் இருக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் இந்த வயதுகளில் உடலில் சேமிக்கப்படுகிற சக்தியை செலவழிக்கிற திறன் செல்களுக்கு குறைந்து விடுகிறது. கூடவே வயதாகும் போது குறைகிற உடல் சார்ந்த வேலைகளும் பருமனை நோக்கி நகர வைக்கிறது.

2. குறையும் உடல் சார்ந்த வேலைகள்( udal sarndha velaigal kuraivadhu): வயதிலோ அல்லது வயது அதிகமோ உடல் சார்ந்த வேலைகள் (நடப்பது, ஓடுவது உடற்பயிற்சி, மாடிப்படி ஏறுவது) குறையும் போது செலவழிக்கப்பட வேண்டிய கலோரிகள் அளவு குறைந்து தேவையின்றி உடலில் சேமிக்கப்படுகின்றன. பலன் உடல் பருமன்.

3. ஜீன் வழி வருகிற மரபு குறிப்புகள்(marabu vali) : சில குடும்பங்களில் வழி வழியாக வருகிற பிள்ளைகள் எல்லோருமே குண்டாக இருப்பார்கள். அவர்கள் சாப்பிடுகிறார்களோ இல்லையோ உடல் பெரிதாகிக் கொண்டே இருக்கும். அதிக கலோரிகளை எரித்து செலவழித்து உடல் எடை கூடுவதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவர்கள் ஜீன்கள் இயல்பிலேயே சக்தி குறைந்தவையாக இருக்கும்.

4.குடும்பத்தின் அமைப்பு(kudumba amaippu): சில உயர் குடும்பங்களில் இயல்பாகவே அடிக்கடி ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடுவது, பிட்ஸா போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது ஒரு ஸ்டேட்டஸ் சார்ந்த விஷயமாக இருக்கும். பணக்காரர்களுக்கு என்றே இருக்கிற விஷயங்களை எல்லாம் முடித்து விட்டு பெற்றோர்கள் பிள்ளை வளர்ந்திருக்கிறானா என்று பார்க்கும்போது பிள்ளை கண்டபடி வளர்ந்திருப்பான்.

5. சாப்பிடும் பழக்கம்(saapidum palakkam): சிலர் சாப்பிடுவதை மட்டுமே ஒரே பொழுது போக்காக வைத்திருப்பார்கள். சில வீடுகளில் விலங்குகளுக்கும், மனிதர்களைப்போல உடல் எடை கூடுமா? என்ற கேள்வி இருந்தது. கூடும் என்று நியூயார்க்கின் ராக் பைல்லர் பல்கலைக்கழகம் நிரூபித்திருக்கிறது. இதற்கு காரணமாக அவர்கள் கண்டுபிடித்திருப்பது ‘பாஸ்ட்’ என்கிற ஒரு வைரஸ் தொற்று. இந்த வைரஸ் விலங்குகளின் மூளையில் தொற்றுவது அவற்றின் உடல் எடை கூட முக்கியமான காரணம் என்கிறார்கள். டி.வி. பார்த்துக் கொண்டே கொறிப்பது பழக்கமாக இருக்கும். ஒரு எபிசோட் தருகிற திகிலில் இரண்டு தட்டு நொறுக்குகள் காலியாகி இருக்கும். பார்க்கிற சுவாரஸ்யத்தில் சிலர் நொறுக்குகளோடு சேர்ந்து கைவிரல்களையும் கொறித்துக் கொள்வதும் கூட உண்டு. சில வீடுகளில் பெண்கள் எல்லோரும் சாப்பிடும் வரை அமைதியாக இருப்பார்கள் முடிந்ததும் மிச்சம் மீதி இருக்கிற எல்லாவற்றையும் பேசிக் கொண்டே சாப்பிட்டு விடுவார்கள். திடீரென்று ஒருநாள் கீழே உட்கார்ந்திருந்து எழுந்திருக்க முடியாமல் யாராவது கை பிடித்து தூக்கி விடும்போதுதான் உடல் எடை கூடி குண்டாகி இருப்பது கவனத்துக்கு வரும்.

6. வாழ்க்கை முறை பழக்கம்( vaazhkkai murai): சிலருக்கு அதிக எண்ணெய் போல கொழுப்பு இருக்கிற உணவுகள்தான் பிடிக்கும் எதெல்லாம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமோ அதுதான் சுவையாக இருப்பதாகத் தோன்றும். விளைவு பெரிய எடையுடன் கூடிய உடல்.

7. மணம் சார்ந்த பிரச்னைகள்(mana pirachanai): கோபம், வருத்தம், கவலை போன்ற உணர்வுகளுக்கு சுலபமாக சாப்பிடும் பழக்கத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் சக்தி உண்டு. பல குண்டான பெண்களின் எடை கூடிய காரணம் மன அழுத்தம் இருக்கும் போதெல்லாம் சாப்பிடுவது.

8. பசித்த வாய்( eppodhum pasi): சிலருக்கு வயிற்றில் பசி இருக்காது. ஆனால் எதையாவது பார்த்தால் வாய் மட்டும் பரபரக்கும். சாப்பிடுவார்கள். முடிவு பருமன்.

9. ஹார்மோன் குறைகள்( hormone kuraigal): தைராய்டு பிரச்னைகள் ஸ்டீராய்ட் மருந்துகள் கர்ப்பத் தடை மாத்திரைகள். மன அழுத்தக் குறைபாட்டிற்குச் சாப்பிடும் மருந்துகள் போன்றவை உடல் எடையைக் கூட்டி பருமனை உருவாக்கக் கூடியவை.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...