சிறுதொழில்: சமோசா தயாரிப்பு தொழில்

 Siru thozhil: samosa thayarippu thozhil - சமோசா தயாரிப்பில் கணிசமான லாபம் பார்க்கலாம்
pengal Siru thozhil: samosa thayarippu thozhil for home maker in tamilnadu
Best small/micro scale business ideas ( Samosa making and selling)
மற்ற எண்ணெய் பலகாரங்களை விட சமோசாவின் ருசி பலருக்கு பிடிக்கும். மேலும் கடைக்காரர்கள் சமோசா தயாரிப்பதில்லை. வெளியே வாங்கியே விற்கின்றனர். நல்ல தரம் மற்றும் சுவையோடு சமோசா தயாரித்து விற்பது லாபகரமான தொழில் என்று கூறுகிறார், கோவை மாவட்டம், சூலூரை சேர்ந்த ஜேம்ஸ்.

அவர் கூறியதாவது: தேவகோட்டையை சேர்ந்த நான் 13 வயதில் பிழைப்பு தேடி கோவை வந்தேன். ஓட்டல்களில் பல்வேறு வேலைகளை செய்து, பிறகு சமையல் மாஸ்டர் ஆனேன். பிறகு கோவையில் சமோசா தயாரிப்பவர்களிடம் தினசரி ஆயிரம் சமோசாக்களை மொத்தமாக வாங்கி சூலூரில் உள்ள கடைகளில் 3 ஆண்டு விற்றேன். அதில் ஓரளவு வருமானம் கிடைத்தது. பின்னர் சமோசா தயாரிக்கும் தொழிலை ரூ.10 ஆயிரத்தில் துவக்கினேன். 10 ஆண்டாக சமோசா தயாரித்து வருகிறேன்.
நானும் எனது மனைவியும் தினசரி 2 ஆயிரம் சமோசா தயாரிக்கிறோம்.  ஆயிரம் சமோசாவை நேரில் கடைகளுக்கு கொண்டு சென்று விற்கிறேன். மீதி ஆயிரத்தை சிறு வியாபாரிகளுக்கு விற்று விடுகிறேன். எங்களை தவிர சூலூரில் மேலும் ஒருவர் 2 ஆயிரம் சமோசா தயாரித்து சப்ளை செய்கிறார். அந்தளவுக்கு சமோசா தேவை இருக்கிறது. இது போல் எல்லா ஊரிலும் சமோசாவுக்கு கிராக்கி உள்ளது. சமோசா தொழிலில் தயாரித்து சப்ளை செய்வது, அதற்குரிய பணத்தை வசூல் செய்வது என வேலைகள் இருக்கும். தரம், சுவை இருந்தால் நாம் சப்ளை செய்யும் சமோசாவுக்கு கிராக்கி இருக்கும். பேக்கரி, டீ கடை உரிமையாளர்கள் தேடி வந்து வாங்குவர்.

சமோசாவுக்கு முக்கிய மூலப்பொருளான வெங்காய விலை கிலோ ரூ.10க்குள் இருந்தால் உற்பத்தி செலவு கட்டுப்படியாகும். இல்லாவிட்டால் வெங்காயத்துக்கு பதில் முட்டைக்கோஸ், கேரட், உருளைக்கிழங்கு துண்டுகள் பயன்படுத்தலாம். சுவை மாறுபடுவதால் வாடிக்கையாளர்களுக்கும் அது பிடிக்கும். சமோசா விற்பனை இல்லாத ஊர்களில் நாமே கொண்டு சென்று விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.

கட்டமைப்பு மற்றும் முதலீடு:
சமையலறை போதுமானது.

  1. கடலைத்தோல் அல்லது மரத்தூள் போட்டு எரிக்கப்படும் அடுப்பு (ரூ.10 ஆயிரம்).
  2. மாவு தேய்க்கும் கடப்பா கல் மேடை, மற்ற உபயோகத்திற்கு ஒரு டேபிள் (தலா ரூ.1000 வீதம் ரூ.2 ஆயிரம்).
  3. இரும்பிலான வடை சட்டி 1 ( ரூ.1,800).
  4.  இரும்பிலான வடை கரண்டி 1 (ரூ.150).
  5.  எண்ணெய் வடிகட்டி சட்டி 2 (ரூ.400).
  6.  பாலிதீன் விரிப்பு 1 (ரூ.100).
  7. சிறிய கத்தி 2 (ரூ.60).
  8. பெரிய கத்தி 1 (ரூ.250).
  9. அட்டை பெட்டிகள் 4 (ரூ.40).
  10. சப்பாத்தி தேய்க்கும் கட்டை 1 ரூ.50.
  11.  சப்பாத்தி சுடும் தோசை கல் 1 ரூ.550.
ஆக மொத்தம் ரூ.15,400 ஆயிரம் தேவை.
ரெடிமேடாக அடுப்பு உள்ளது. அல்லது அதை கட்டி கொடுப்பவர்களும் உள்ளனர்.  மரத்தூள், கடலை தோல் ஆகியவற்றை எல்லா ஊரிலும் சப்ளை செய்பவர்கள் உள்ளனர். இதர பொருட்களை ஹார்டுவேர்ஸ், மளிகை மற்றும் காய்கறி கடைகளில் வாங்கி கொள்ளலாம்.

உற்பத்திக்கு ஆகும் செலவு (ஒரு நாளைக்கு):  2 ஆயிரம் சமோசா தயாரிக்க

  1. 25 கிலோ மைதா மாவு ரூ.540,
  2. கல் உப்பு முக்கால் கிலோ ரூ.3
  3. சமையல் எண்ணெய் 8 லிட்டர் ரூ.480
  4.  பெரிய வெங்காயம் 25 கிலோ ரூ.250
  5.  மிளகாய் பொடி 250 கிராம் ரூ.40
  6.  கடலை தோல் அல்லது மரத்தூள் அரை மூட்டை ரூ.50
  7.  மின்கட்டணம் ரூ.5
  8.  இட வாடகை ரூ.35
  9.  வாகன பெட்ரோல் செலவு ரூ.70
  10. இதர செலவுகள் ரூ.100
  11.  2 நபர் கூலி தலா ரூ.250 வீதம் ரூ.500
என ஒரு நாளைக்கு ரூ.2,073.

கிடைக்ககூடிய வருவாய் (ஒரு நாளைக்கு) : டீ கடை மற்றும் பேக்கரிகளுக்கு ஒரு சமோசா ரூ.1.50க்கு விற்கப்படுகிறது. உற்பத்தி செய்பவர் நேரில் கடைகளுக்கு விற்பனை செய்தால் 2 ஆயிரம் சமோசா ரூ.1.50 வீதம் வருவாய் ரூ.3 ஆயிரம். ஒரு நாள் உற்பத்தி செலவு போக லாபம் ரூ.927. சிறு வியாபாரிகளுக்கு விற்றால் ஒரு சமோசா ரூ.1.20க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தியாளருக்கு வருவாய் ரூ.2,400. லாபம் ரூ.327. இதில் நேரில் விற்பது கூடுதல் லாபத்தை தரக்கூடியது. கூலியாட்களை வைத்து சப்ளை செய்து கூடுதல் லாபத்தை சம்பாதிக்கலாம். சமோசாவில் சற்று பெரிய அளவில் தயாரித்தால் ரூ.2க்கு விற்கலாம். சமோசா பெரிய அளவாக இருந்தால் உற்பத்தி எண்ணிக்கை குறையும். லாபம் குறையாது.

சந்தை வாய்ப்பு :  போண்டா, வடை சுடுவது போல் சமோசா தயாரிப்பது எளிதல்ல. அதற்கு முன் உழைப்பும், நேரமும் அதிகம் தேவை. இதனால் டீ கடை மற்றும் பேக்கரி கடைக்காரர்கள் சமோசாவை சொந்தமாக தயாரித்து விற்க ஆர்வம் காட்டுவதில்லை. வெளியே யாராவது தயாரித்து கொடுத்தால் அதை ரூ.1.50க்கு வாங்கி ரூ.2 முதல் ரூ.2.50 வரை விற்கிறார்கள். சமோசாவிற்கு 50 காசு முதல் ரூ.1 வரை அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது. இதனால் தரமாக, சுவையாக சப்ளை செய்பவர்களுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது.

சமோசா தயாரிப்பது எப்படி?
மைதா மாவு 25 கிலோவுக்கு 15 லிட்டர் தண்ணீர், அரை கிலோ உப்பு சேர்த்து பிசைய வேண்டும். மாவை மொத்தமாக திரட்டி எண்ணெய் தடவி, கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மாவை 80 சிறு, சிறு உருண்டையாக்க வேண்டும். அதை சப்பாத்தி கட்டையால் ஒன்றரை அடி அகலத்துக்கு வட்டமாக மெல்லிதாக தேய்க்க வேண்டும். அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்க வேண்டும். ஒட்டாமல் இருக்க, ஒவ்வொன்றின் மீதும் எண்ணெய் தடவி அடுக்க வேண்டும். இவ்வாறு அடுக்கப்பட்ட 10 வட்டத்தை ஒன்றாக அடுக்கி ஒரு தேய்ப்பு தேய்த்து, பெரிய கல்லில் சுட வேண்டும். அடிப்புறம் வெந்ததும் திருப்பி போட வேண்டும். மேல் புறம் வெந்த பகுதியை  தனியாக பிரித்தெடுக்க வேண்டும். அதற்குள் கீழ் புறம் வெந்துவிடும். அதை புரட்டி போட்டு, பிரித்து எடுக்க வேண்டும். இப்படியே 10 வட்டத்தையும் பிரித்தெடுத்த பின்,  மீண்டும் ஒன்றாக அடுக்கி, ஒரு சமோசாவுக்கு தேவையான அளவுக்கு (சுமார் 5க்கு2 இஞ்ச் நீள அகலம்) பெரிய கத்தியால் வெட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு 80 உருண்டையையும் தேய்த்து சுட்டு எடுத்து, அடுக்கி வெட்டினால் 2 ஆயிரம் துண்டுகள் கிடைக்கும். அதை  தனித்தனியாக முக்கோண வடிவில்  சுருட்ட வேண்டும். திறப்பிற்குள் உப்பு, மிளகாய்தூள், நறுக்கிய வெங்காய கலவையை போட்டு மூடி, கரைத்து வைத்த மைதா மாவை பசை போல தடவி ஒட்ட வேண்டும். எண்ணெய் சட்டியில் 100 முதல் 150 எண்ணிக்கையிலான சமோசாவை ஒரு நேரத்தில் போட்டு பொரித்து எடுத்து, எண்ணெய் வடிகட்டியில் சில நிமிடங்கள் வைத்திருந்து எடுத்தால் சமோசா தயார்.

Detail Source: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=21485

Samosa thayarippil super laabam
maatra enney palakarankalai vita samosavin rusi palarukku pitikkum. Melum kadaikkararkal samosa thayarippadhillai. Veliye vangiye virkinranar. Nalla taram matrum suvaiyotu samosa thayaritthu virpathu lapakaramana tholil enru kurukirar, kovai mavattham, sulurai sernta jems.
Avar kuriyatavatu: thevakotthaiyai sernta nan 13 vayadhil pilaipPoo teti kovai vanten. otthalkalil palveru velaikalai seytu, piraku samaiyal mastar anen. Piraku kovaiyil samosa thayarippavarkalitam tinasari ayiram samosakkalai motthamaga vangi suluril ulla kadaikalil 3 antu vitren. adhil oralavu varumanam kadaitthatu. Pinnar samosa thayarikkum tholilai rs.10 ayiratthil thuvakkinen. 10 antaka samosa thayaritthu varukiren.

Nanum enatu manaiviyum tinasari 2 ayiram samosa thayarikkirom. ayiram samosavai neril kadaikalukku kontusenru virkiren. Miti ayiratthai siru viyaparikalukku vitru vitukiren. Enkalai tavira suluril melum oruvar 2 ayiram samosa thayaritthu supply seykirar. Anthalaavukku samosa thevai irukkiratu. Itupol ella urilum samosavukku kirakki ulladhu. samosa tholilil thayaritthu supply seyvatu, atarkuriya panatthai vasul seyvatu ena velaikal irukkum. Taram, suvai iru ntal nam supply seyyum samosavukku kirakki irukkum. ti kadai, pekkari urimaiyalarkal teti vantu vanguvar. samosavukku mukkiya mulapporulana venkaya vilai kilo rs.10Kkul iruntal Urpatthhi selavu katthuppatiyakum. Illavitthal venkayatthukku padhil mutthaikkos, kerat, urulaikkilanku thundukal payanpathutthhalaam. suvai marupathuvatal vatikkaiyalar kalukkum atu pitikkum. samosa virpanai illata urkalil name kontu senru vitral nalla laabam parkkalam.

Kattamaippu, mudhaleedu
samaiyalarai potumanatu. Kathalaaitthol allatu maratthul pottu erikkappathum atuppu (rs.10 ayiram). Mavu theykkum katappa kal metai, maatra upayokatthirku oru tepil (thalaa rs.1000 Vitam rs.2 ayiram), irumpilana vathai satti 1 (rs.1,800), Irumpilana vathai karanti 1 (rs.150), Enney vadhigatthi satti 2 (rs.400), Polythen virippu 1 (rs.100), siriya katthi 2 (rs.60), Periya katthi 1 (rs.250), Attai pettikal 4 (rs.40). sappatthi theykkum katthai 1 rs.50, sappatthi sutum tosai kal 1 rs.550. Mottham rs.15,400 ayiram thevai.
readymadeaka atuppu ulladhu. Allatu athai katthi kotuppavarkalum ullanar. Maratthul, kathalaai tol agiyavatrai ella urilum supply seypavarkal ullanar. Itara porutkalai hartuvers, malikai matrum kaykari kadaikalil vangi kollalam.

Urpatthhi selavu (oru nalaikku): 2 ayiram samosa thayarikka 25 kilo maidha mavu rs.540, Kal uppu mukkal kilo rs.3, samaiyal enney 8 litter rs.480, Periya venkayam 25 kilo rs.250, Milakay poti 250 kiram rs.40, Kathalaai tol allatu maratthul arai mutthai rs.50. Minkatthanam rs.5, Ita vatakai rs.35, Vakana petrollselavu rs.70, Itara selavukal rs.100, 2 Napar kuli thalaa rs.250 Vitam rs.500 Ena oru nalaikku rs.2,073.

Varuvay (oru nalaikku): tea kadai matrum pekkarikalukku oru samosa rs.1.50Kku virkappathukiratu. Urpatthhi seypavar neril kadaikalukku virpanai seytal 2 ayiram samosa rs.1.50 Vitam varuvay rs.3 ayiram. Oru nal Urpatthhi selavu poka laabam rs.927. siru viyaparikalukku vitral oru samosa rs.1.20Kku virkappathukiratu. idhan mulam Urpatthhiyalarukku varuvay rs.2,400. laabam rs.327. Ithil neril virpathu kututal lapatthai tarakkutiyatu. Kuliyatkalai vaitthu supply seytu kututal lapatthai sampatikkalam. samosavil sarru periya alavil thayaritthal rs.2Kku virkalam. samosa periya alavaka iruntal Urpatthhi ennikkai kuraiyum. laabam kuraiyatu.

sandhai vayppu: Vadai, ponda suduvathu pol samosa thayarippathu elidhalla. Atharku mun ulaippum, neramum adhigam thevai. idhanal tea kadai matrum beakeri kadaikkararkal samosavai sontamaga thayaritthu virka arvam katthuvadhillai. Veliye yaravatu thayaritthu kotutthal athai rs.1.50Kku vangi rs.2 mudhal rs.2.50 Varai virkirarkal. samosavirku 50 kasu mudhal rs.1 Varai avarkalukku laabam kadaikkiratu. idhanal taramaga, suvaiyaka supply seypavarkalukku varaverpu adhigam ulladhu.

Samosa thayarippathu eppati?
maidha mavu 25 kilovukku 15 litter thanneer, arai kilo uppu sertthu pisaiya vendum. Mavai motthamaga tiratthi enney thadavi, kal mani neram ura vaikka vendum. Mavai 80 siru, siru uruntaiyakka vendum. athai sappatthi katthaiyal onrarai adi akalatthukku vatthamaga mellitaka theykka vendum. Avatrai onran mitu onraka atukka vendum. Otthamal irukka, ovvonrin mitum enney thadavi atukka vendum. Ivvaru atukkappattha 10 vatthatthai onraka atukki oru theyppu theytthu, periya kallil suta vendum. Atippuram ventatum tiruppi pota vendum. Melpuram venta pakutiyai thaniyaka piritthetukka vendum. Atarkul kilpuram ventuvitum. athai puratthi pottu, piritthu etukka vendum. Ippatiye 10 vatthatthaiyum piritthetuttha pin, mintum onraka atukki, oru samosavukku thevaiyana alavukku (sumar 5kku2 inch nila akalam) periya katthiyal vetthik kolla vendum. Ivvaru 80 uruntaiyaiyum theytthu sutthu etutthu, atukki vetthinal 2 ayiram thundukal kadaikkum. athai thanitthaniyaka mukkona vativil suruttha vendum. Tirappirkul uppu, milakaytul, narukkiya venkaya kalavaiyai pottu muti, karaitthu vaittha maidha mavai pasai pola thadavi ottha vendum. Enney sattiyil 100 mudhal 150 ennikkaiyilana samosavai oru neratthil pottu poritthu etutthu, enney vadhigatthiyil sila nimidhankal vaitthiruntu etutthal samosa thayar.

pengal Siru thozhil alosanai: samosa thayarippu thozhil for home maker in tamilnadu, Best small/micro scale business ideas ( Samosa making and selling), nalla thozhil todanga vaippu, super profit in self employment.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...