Related Posts Plugin for WordPress, Blogger...

Friday, 1 May 2015

வெயில் காலத்தில் சருமத்தையும், தலைமுடியையும் பாதுகாப்பது எப்படி?

veyyil kaalatthil sarumatthai, thalai mudiyai paadhugappadhu eppadi..?

skin and hair care during summer, veyyil kaalatthil sarumatthai, thalai mudiyai paadhugappadhu eppadi..?
‘‘வெயில் காலத்தில் நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது சருமமும் தலைமுடியும்தான்...’’ என்று ஆரம்பித்தார் பிரபல அழகு நிலையத்தின் முதன்மை சிகை அலங்கார நிபுணரான ஹரி.

‘‘கோடையில் நம் சுற்றுப்புற சூழல் மிகவும் வறண்டு இருக்கும். அது நம் சருமத்தையும் தலைமுடியையும் பாதிக்கும். சுற்றுப்புற சூழலில் இருக்கும் தூசி நம் சருமத்தில் படியும் வாய்ப்பு அதிகம். அதனால் எப்போது வெளியே சென்றாலும், தலைமுடியையும் முகத்தையும் ஹெல்மெட் அல்லது துணி கொண்டு மறைத்தபடிதான் செல்ல வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போது குடை பிடித்துக் கொண்டு போவது அவசியம். வெயிலில் அதிகம் செல்வதால் சருமம் கருமையாக மாறும். அதைத் தடுக்க சன் ஸ்கிரீன் மாய்சரைசர் பயன்படுத்தலாம்.

இது வெயிலினால் ஏற்படும் கருமையை தடுக்கும். இந்த சன் ஸ்கிரீன் லோஷன் நான்கு மணி நேரங்கள்தான் வேலை செய்யும். அதாவது, பாதுகாக்கும். எனவே, நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை அதைத் தடவிக் கொள்ள வேண்டும். இந்த சன் ஸ்கிரீன் லோஷன், மாய்சரைசர் உடன் சேர்ந்து வருகிறது. இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைப்பதுடன் கருமையாகாமலும் பாதுகாக்கும். சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தும் போது மேக்கப் போடுவதை தவிர்க்க வேண்டும். அதே சமயம் முகத்தில் போடும் சன்ஸ்கிரீன் லோஷனை உடம்பில் தடவக் கூடாது.

உடலுக்கு என்று தனி கிரீம் உண்டு. இது உடல் சருமத்துக்கு ஏற்ப தயாரான ஒன்று. அதைத்தான் உடலுக்கு தடவ வேண்டும். போலவே உடம்பில் தடவும் கிரீமை முகத்துக்கு பூசக் கூடாது. அப்படி செய்தால் முகத்தில் பிக்மென்டேஷன் ஏற்படலாம். இன்னொரு விஷயம். முகத்தில் சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தினால் மட்டும் போதாது. சருமத்தில் எப்போதும் ஈரப்பதம் இருக்கவும், ரத்த ஓட்டம் சீராகி பொலிவுடன் காட்சித் தரவும் மாதம் ஒருமுறை ஃபேஷியல் செய்து கொள்வதும் அவசியம்.

ஃபுரூட், ஹெர்பல், பேர்ல், சாக்லெட் என ஃபேஷியலில் பல வகைகள் உண்டு. பொதுவாக ஃபேஷியல் செய்யும் போது கையோடு பிளீச் செய்வார்கள். ஆனால், கோடையில் ஃபேஷியலுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள். பிளீச் செய்யாதீர்கள். தொடர்ந்து மாதம் ஒருமுறை ஃபேஷியல் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளி களோ, கண்களுக்கு கீழ் கருவளையங்களோ, முகச் சுருக்கங்களோ வராமல் பாதுகாக்க முடியும். முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வது போல் கை மற்றும் கால் விரல்களையும் ஃப்ரெஷ் ஆக வைத்துக் கொள்ளவேண்டும்.

விரல் நகங்கள் ஆரோக்கியமாக இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். பெண்களின் நீண்ட விரலுக்கு அழகு சேர்க்கும் நகங்களை நல்ல முறையில் சுத்தம் செய்து நகப்பூச்சு பூசினால் பார்க்க அழகாக இருக்கும். மாதம் ஒரு முறை கைகளுக்கு மெனிக்கியூர், கால் பாதங்களுக்கு பெடிக்கியூர் செய்யலாம். கால் மற்றும் கை விரல்களில் உள்ள நகங்களை சீராக வெட்டி, ஸ்கிரப்பர் கிரீம் கொண்டு சருமத்தில் உள்ள டெட் செல்ககளை அகற்றுவார்கள். பிறகு கிரீம் கொண்டு மசாஜ் செய்வார்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்...’’ என்று சொல்லும் ஹரி, கையோடு தலைமுடியை பராமரிக்கும் விதம் குறித்தும், கோடைக் கால சிகை அலங்காரம் பற்றியும் விளக்க ஆரம்பித்தார்.

‘‘தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது நம் வழக்கம். ஆனால், அதிகளவு எண்ணெய் தடவினால் தலையில் பொடுகு பிரச்னை ஏற்படும் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். இதற்கு காரணம் இருக்கிறது. இயற்கையாகவே நம் தலையில் சீரம் என்ற எண்ணெய் சுரக்கிறது. அதில் மேலும் நாம் தடவும் எண்ணெய் சேரும்போது பிசுபிசுப்பாகும். காற்றில் உள்ள தூசுகள் நம் தலையில் ஒட்டிக் கொள்வது இதனால்தான். இந்த தூசுகள்தான் நாளடைவில் பொடுகாக மாறுகிறது. எனவே, தலைக்கு அதிகப்படியாக எண்ணெய் தடவக் கூடாது. கோடைக் காலத்தில் வெளியே செல்லும் போது அவசியம் தலை முடியை மூடிக்கொள்ள வேண்டும்.

வாரத்துக்கு மூன்று முறை தலையில் வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து கொள்ளலாம். இரண்டு மணி நேரங்கள் கழித்து குளிக்கலாம். தலைக்கு குளித்த பின்னர் தவறாமல் கண்டிஷ்னரை தலைமுடிக்கு போட வேண்டும். கவனியுங்கள், தலைமுடிக்குத்தான் கண்டிஷ்னர் போட வேண்டும். தலை பகுதிக்கு அல்ல. அப்படிச் செய்தால் மண்டை காய்ந்து போகும். பொடுகு பிரச்னை ஏற்படும். வெயில் காலத்தில் முடியை சின்னதாக வெட்டிக் கொள்வதுதான் ஃபேஷன். அப்படி குறைக்க விரும்பாதவர்கள் மல்டி லேயர் கட்டிங் செய்து கொள்ளலாம். இது முடியை அடுக்கடுக்காக எடுத்துக் காட்டும். குதிரைவால் போட்டாலும் அழகாக இருக்கும்.

பொதுவாக முக அமைப்புக்கு ஏற்பதான் சிகை அலங்காரம் செய்வது வழக்கம். வட்டம், சதுரம் என எந்த வகை முக அமைப்பாக இருந்தாலும், அதனை ஓவல் அமைப்புக்கு ஏற்ப மாற்றி அமைப்போம். அதாவது, நெற்றிப்பகுதியில் கொஞ்சம் முடிகளை சின்னதாக வெட்டி பிரிஞ்ச் போல் அமைப்போம். இதுவும் பார்க்க அழகாக இருக்கும். முடிகளை கலரிங் செய்யும் போது நீலம் மற்றும் கருப்பு நிறம் சேர்த்து கலரிங் செய்யலாம். நீலம் கூல் நிறம் என்பதால், முடி கருப்பாக இருந்தாலும், வெயிலில் செல்லும் போது பார்ப்பவர் கண்களுக்கு குளுமையை ஏற்படுத்தும்...’’.
skin and hair care during summer, veyyil kaalatthil sarumatthai, thalai mudiyai paadhugappadhu eppadi..
'' In the summer, we have to take note of the talaimutiyumtan skin ... '' began as a Master Hair expert Hari famous beauty center. '' Our environment is very dry in summer. It can affect our hair and skin. The environment will be more likely to succumb to dust on our skin. So when we go out, to go maraittapatitan with hair and face helmet or cloth. You need to hold an umbrella while walking on the road course. Darkens the skin to the sun becomes too much. Maycaraicar use sun screen to prevent it.
Loading...

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )

Write Your Comments in Tamil...


Labels

18 plus tips in tamil Aanmeegam aanmigam Adult education Adult education in Tamil Andharangam Apps Arokiyam Awareness Awareness Video Back pain Bad foods Bakthi paadalgal tamil mp3 Beauty tips Blood Body Fitness Bone Brain Child care tips Cinema cinema vimarsanam Computer Daily seidhigal Deiva vazhipadu Disease E-shopping Education Enna Kaaranam Exam tips Funny News in Tamil Funny Tamil Jokes General tips gk Habits Hair care Health Advice in tamil Health doubts Health doubts in Tamil Health News Health Tips healthy foods History IIT JEE Inventions Iyarkai maruthuvam Iyarkai unavu Kalvi Keerai Kollywood Actress Stills Kudumbam Kulandhai Valarppu muraigal Kuzhndhai valarppu muraigal lifehacks Lifestyle Manonalam Maruthuva Kunanagal maruthuva kurippugal Meditation Men Mind Mooligai Mooligai Maruthuvam motivation in tamil movie trailers Muthra naattu maruthuvam Natural Cure in tamil Natural Food Natural Medicines Natural medicines in tamil Noigal Obesity Old tamil video songs Organ donation Paaliyal kalvi Paati vaithiyam Paliyal Kalvi Parenting patti vaithiyam Pengal.com Podhu arivu Policy Psychology Recipes in Tamil research Sadhanai Samayal seimurai Samayal Tips Short Stories in Tamil siddha maruthuvam Sindhanai sidharalgal Siru thozhil ideas Small business ideas Smart Phone Social service software suvarasiyam seidhigal Suya inbam Suya thozhil Tamil fun Tamil movie reviews Tamil movie songs Tamil Movie Songs Lyrics Tamil Movies Tamil Mp3 songs Tamil stories Technology thoppai kuraikka Tips for Students Tooth Care Udaluravu kelvigal vanigam Vazhviyal veettu maruthuvam Vina vidai Vinodha nigalvugal Vinodha seidhigal Vinodhangal Vivasayam whatsapp Women Helath Yoga Yoga in Tamil