IIT JEE நுழைவு தேர்விற்கு சுயமாக படிக்கலாமா அல்லது பயிற்சி வகுப்பு தேவையா..?


IIT JEE entrance exam preparation tips IIT JEE நுழைவு தேர்விற்கு சுயமாக படிக்கலாமா அல்லது பயிற்சி வகுப்பு தேவையா..?

சுயமாக திட்டமிட்டுப் படித்தல் மற்றும் கோச்சிங் வகுப்புகளுக்கு செல்லுதல் ஆகிய இரண்டிலுமே, பல நன்மைகள் உள்ளன. ஒரு மாணவர், கோச்சிங் வகுப்புக்கு செல்வதும், செல்லத் தேவையில்லை என்று முடிவு செய்வதும் அவரின் உள்ளுணர்வு சார்ந்த விஷயம்.

பொதுவாக, கோச்சிங் வகுப்புகளை மாணவர்கள் நாடுவதற்கு காரணம், போட்டித் தேர்வு என்பது ஒரு ஒப்பீட்டுத் தேர்வாக இருப்பதால்தான். உங்களின் சக தோழர்களை விட, நீங்கள் சிறப்பாக செயல் பட்டால்தான் வெற்றியடைவீர்கள் என்ற ஒப்பீடு அங்கே செய்யப்படுகிறது. கோச்சிங் நிறுவனங்கள், அகடமிக் மேலாளர்களாக செயல்பட்டு, போட்டித் தேர்வுகளுக்கேற்ப, மாணவர்களின் படித்தலை திட்ட மிட்டு, அவர்களை தயார்படுத்துகின்றன.

சுயமாக படித்தல் மற்றும் கோச்சிங் மூலமாக படித்தல் ஆகிய இரண்டு முறைகளிலுமே, மாணவர்கள் தங்களை ரெகுலர் முறையில் சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக, JEE தேர்வுக்கு தயாராகும் மாணவர், JEE pattern -ல், சில மாதிரித்(Mock test) தேர்வுகளை கட்டாயம் எழுதிப்பார்க்க வேண்டும். இந்த மாதிரித் தேர்வுக்கான சூழல், நிஜத் தேர்வைப் போன்றே இருக்க வேண்டும்.

IIT JEE தேர்வில் வென்றவர்கள் சொல்வது என்ன?

கோச்சிங் வகுப்பு செல்வது தவறில்லை என்றும், அதே சமயம், அதுமட்டுமே வெற்றிக்கு காரணமாகி விடாது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் தேர்வில் வென்றவர்கள்.

IIT JEE தேர்வில் வென்றவர்களின் கருத்துக்களிலிருந்து சில...

தேர்வுக்கு தயாராகும் செயல்பாட்டை சரியான முறையில் பேலன்ஸ் செய்து தொடர்வதற்கு கோச்சிங் வகுப்புகள் துணை புரிகின்றன. அதே சமயம், கோச்சிங் வகுப்புக்கு செல்லாமலேயே, ஒருவர் தனது கடின மற்றும் திட்டமிட்ட முயற்சியின் மூலமாக மட்டுமே கூட, தேர்வை வெல்ல முடியும். அர்ப்பணிப்பு மற்றும் அக்கறை இல்லாமல், தேர்வை நிச்சயம் வெல்ல முடியாது.

ஒருவர் கோச்சிங் வகுப்பிற்கு சென்றாலும் சரி, இல்லையென்றாலும் சரி, கடின உழைப்பை நம்ப வேண்டும். கோச்சிங் வகுப்பில் சேர்ந்து விட்டால் மட்டுமே ஒருவரால் வென்று விட முடியாது. இது அனைத்து வகை போட்டித் தேர்வுகளுக்குமே பொருந்தும். கோச்சிங் வகுப்புகள் தேவையான ஆலோசனைகளையும், ஆதரவையும் தருகின்றன என்பது உண்மை தான். ஆனால், கண்டிப்பாக கோச்சிங் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. சுய தயாரிப்பு என்பது மிகவும் முக்கியமானதொரு அம்சம். ஒருவரின் கடின உழைப்பு, அவருக்கு இறுதியாக வெற்றியைத் தரும்.

சுயமாக படித்தல் என்பது, உங்களது தயாரிப்பு செயல்பாட்டை அளவிடவும், உங்களது கருத்தாக்கங்களை மறுப்பதிவு செய்துகொள்ளவும் உதவுகிறது. கோச்சிங் வகுப்புகள், ஒருவருக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, சுயமாக படிக்கும் போது எழுகிற சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும் உதவுகிறது.

உங்களால், எந்தளவிற்கு முடிகிறதோ, அந்தளவிற்கு அதிக நேரத்தை, சுயமாக படித்தலுக்கு ஒதுக்குவது நல்லது.

IIT JEE ரேங்க் என்று வருகையில்...

போட்டித் தேர்வுகளில் சிறப்பான ரேங்க் பெற, கோச்சிங் வகுப்புகள் துணைபுரிகின்றன. அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் கொண்டவர்களுக்கு, சுயமாக படித்தல் மட்டுமே போதும். அதேசமயம், முதன்மையான ரேங்க் மற்றும் பிடித்த கல்வி நிறுவனங்களில் சேர்வது என்று வரும் போது, கோச்சிங் வகுப்புகளின் சேவை தேவையான ஒன்றாக மாறுகிறது.
சராசரி மாணவர்கள், சரியான முறையில் செயல்பட்டு, தங்களின் தடைகளைக் கடந்து முன்னேறி வந்து, தேர்வை வெற்றிகொள்வதற்கு, கோச்சிங் வகுப்புகள் பெரும் பலமாக விளங்குகின்றன.

கோச்சிங் வகுப்புகள், ஒரு மாணவரின் திட்டமிடப்பட்ட revision programmes -ஐ உறுதிசெய்து, அவரின் செயல்பாட்டை சரியான கால இடைவெளியில் மதிப்பீடு செய்கின்றன. மேலும், சரியான முறையிலான மாதிரித் தேர்வுகளை(mock tests) கோச்சிங் வகுப்புகள் நடத்துவதால், ஒரு மாணவர் தேர்வுக்கு முன்பான, முறைப்படியான பயிற்சியைப் பெறுகிறார்.

இது தவிர, படிப்பின் போது எழும் சந்தேகங்களை, விரைவில் தீர்த்துக் கொண்டு, அதன்மூலம் அடுத்த நிலைக்குச் செல்ல, கோச்சிங் வகுப்புகளே ஆதாரம்.
IIT JEE entrance thervirkku siyamaaga padippadhu coaching selvadhu edhu sirappu, IIT JEE entrance exam preparation tips, join IIT JEE coaching after 12th std, Join engineering and technical education thru IIT entrance examinations 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...