சிக்கன் கட்லட் [Chicken cutlet recipe]
சிக்கன் கட்லட் [Chicken cutlet recipe]
தேவையான பொருட்கள்:
- எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
- வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு - 1 பெரியது
- வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
- பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பெரியது
- பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
- பொடியாக அரிந்த புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
- பொடித்த ஒட்ஸ் - தே.அளவு
- உப்பு+எண்ணெய் = தேவைக்கு
சிக்கன் கட்லட் செய்முறை :
சிக்கனில் வரமிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா, சிறிதளவு நீர் விட்டு 2 விசில் வரை வேகவைக்கவும்.
சிக்கனில் நீர் இருந்தால் அதனை வற்றும் வரை நன்கு பிரட்டவும்.
ஆறியதும் கையால் நன்கு உதிர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், உருளைக் கிழங்கு, புதினா, கொத்தமல்லி தேவையானளவு உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக பிசையவும்.
தளர்த்தியாக இருந்தால் பொடித்த ஒட்ஸினை சிறிதளவு சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.
தேவையானளவில் உருண்டையாக எடுத்து விரும்பிய வடிவில் செய்து ஒட்ஸில் பிரட்டி 15 நிமிடம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
பின் தவாவில் எண்ணெய் விட்டு இரு புறமும் வேக விட்டு எடுக்கவும்.
Chicken cutlet recipe in tamil, cutlet recipes, Chicken cutlet recipe cooking steps in tamil, samayal seimurai vilakkam, samayal books online
No comments: