எந்ததொரு 'கிசுகிசு'விலும் சிக்காத தமிழ் நடிகை..
எந்ததொரு 'கிசுகிசு'விலும் சிக்காத தமிழ் நடிகை..( endha kisu kisuvilum sikkaadha tamil nadigai Usha nandhini) :
1973-இல் வெளியான நடிகர் திலகத்தின் 163வது படமான "பொன்னூஞ்சல்' (கறுப்புவெள்ளை) வாயிலாக சிவாஜிகணேசனின் ஜோடியாக பெருமையாக அறிமுகமானவர் நடிகை "உஷாநந்தினி' இவர் தொடர்ந்து சிவாஜி, ஜெய்சங்கர் என இரு ஹீரோக்களுடன் மட்டுமே குறிப்பிட்ட படங்களில் ஜோடியாய் நடித்து வந்தார். குறிப்பிட்ட காலகட்டத்தில் கௌரவம் (1973), ராஜபார்ட் ரங்கதுரை (1973), மனிதனும் தெய்வமாகலாம் (1975), என்னை போல் ஒருவன் (1978) என சிவாஜி கணேசனோடும், பொன்வண்டு, தாய்வீட்டு சீதனம், அத்தையா மாமியா, என ஜெய்சங்கருடனும் ஜோடியாக நடித்தார் உஷாநந்தினி. இவர் தமிழில் சிவாஜிக்கு ஜோடியாக அறிமுகம் ஆகும் முன்னரே 1972-இல் வெளியான டி.ஆர்.ராமண்ணாவின் சக்திலீலை படத்தில் பரமசிவன் வேடம் பூண்ட ஜெமினி கணேசனுக்கு ஜோடியாய் பார்வதிதேவி வேடம் ஏற்று சிறப்பித்தவராகும்.தமிழில் வெளியான ஆயிரம் ஜென்மங்கள் (1978) படத்தின் மூலப் படமான யக்ஷகானம் (இயக்குநர்: ஷீலா) மலையாள படத்தில், பத்மப்ரியா தமிழில் ஏற்ற வேடத்தை சிறப்பாக செப்பனிட்டு கேரள மக்களின் அபிமானத்தை ஈட்டியவர். "கிசுகிசு'வில் தன்னை இணைத்துக் கொள்ளாத உஷாநந்தினி திருமதியான பின்பு திரையுலகைத் திரும்பி பார்க்காத நட்சத்திரமாவார்.
endha kisu kisuvilum sikkaadha tamil nadigai Usha nandhini
No comments: