
நம்
உடலில் மில்லியன் கணக்கில் செல்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒரே
மாதிரியானவை அல்ல. வடிவிலும் செயலிலும் அவை பல்வேறு வகைகளாக இருக்கின்றன.
அதில் ஒரு வகை செல்கள்தான் Fat cells என்கிற கொழுப்பு செல்கள். இந்த
செல்கள் பெரிதானால் உடல் எடை அதிகரித்து பருமன் வந்து விடும். இந்த
செல்களின் அதிகரிப்பு இரண்டு விதங்களில் நடக்கலாம். ஒன்று இருக்கிற செல்கள்
அளவில் பெரிதாவது அல்லது இருக்கிற செல்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது இந்த
அடிப்படை மாற்றம்தான் மருத்துவர்களால் Obesity - உடல் பருமன் என்று
சொல்லப்படுகிறது. இன்னும் புரிகிறபடி சொன்னால் உடலில் தேவைக்கும் அதிகமாக
கொழுப்பு சேர்வது.
இந்த செல்களில்தான் சக்தி சேமிக்கப்பட்டு
செலவழிக்கப்படுகிறது. உடல் பருமனில் சேமிக்கிற சக்தி அதிகமாகி, செலவழிக்கிற
சக்தி குறைந்து விடும். இதனால் கொழுப்பு செல்கள் பெரிதாக ஆரம்பித்து
விடுகின்றன.
உடல் எடை செலவழிக்கப்படுகிற சக்தி கலோரிகளைப்
பொறுத்தது. குறைவான செலவு அதிக எடையை உருவாக்கி விடும். அதிக செலவு குறைந்த
எடையை உருவாக்கும்.
No comments: