அன்னதானம் வழங்க ஆண்டுக்கு ரூ.70 கோடி செலவு செய்யும் திருப்பதி
அன்னதானம் வழங்க ஆண்டுக்கு ரூ.70 கோடி செலவு செய்யும் திருப்பதி[tirupati annadanam selavu 70 crores]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடை விடாமல் அன்ன தானம் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 1985ம் ஆண்டு ஏப்ரல் 6ம் திகதி அன்னதானம் வழங்கும் திட்டம் திருப்பதி கோவிலில் தொடங்கப்பட்டது. முதலில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கப் பட்டு வந்தது.
கடந்த 1994-; ஆண்டு அன்ன தானம் வழங்குவதற்காக தனி அறக்கட்டளை தொடங்கப் பட்டது.
எல்.வி.ராமய்யா என்ற பக்தர்கள் இந்த அறக்கட்டளைக்கு முதல் நிதியாக ரூ.10 இலட்சம் வழங்கினார். அதன் பின்னர் பக்தர்கள் பலர் அன்னதான நிதிக்கு நிதி வழங்க தொடங்கினர்.
அன்னதான திட்டம் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது அறக்கட்டளை நிதி ரூ.600 கோடியை தாண்டிவிட்டது. அதன் மூலம் தினமும் 1.25 இலட்சம் முதல் 1.45 இலட்சம் வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டு வருகிறது.
அன்னதான திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.70 கோடி செலவாகிறது. இதில் ரூ.40 கோடி அறக்கட்டளை நிதி வைப்புதொகை வட்டி மூலம் கிடைக்கிறது. எஞ்சிய ரூ.30 கோடியை தேவஸ்தானம் ஒதுக்குகிறது.
அன்னதான அறக்கட்டளையை நிர்வாகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாலும், இதற்காக வழங்கப்படும் நன் கொடைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாலும் அன்னதானம் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் நடந்து வருகிறது என்று அதிகாரிகள் கூறினார்கள்.
மேலும் பக்தர்களுக்கு வழங்கும் உணவுகள் தரத்தையும் ருசியையும் அதிகரிக்க தேவஸ்தானம் திட்டமிட்டு உள்ளது.
via தினகரன்
tirupati annadanam selavu 70 crores, tirupathi temple free food service, ttd devasthanam donations, ttd annadanam donations, tirupati balaji trust, Tirumala Tirupati Devasthanam, sacred Annadanam, generous donations
No comments: