திருடுவது எப்படி?: என பயிற்சி வகுப்பெடுத்தவர் கைது!

Funny Tamil news: Thiruduvadhu eppadi ena vaguppu eduttha vaalibar - திருடுவது எப்படி?: என பயிற்சி வகுப்பெடுத்தவர் கைது!

மீபகாலமாக எது எதுக்கோ பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சியில் ரயில்வே பொருட்களை திருடுவது எப்படி என வேலை யில்லா பட்டதாரிகள், வறுமையில் வாடும் இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பெடுத்த சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

Thiruduvadhu eppadi ena vaguppu eduttha vaalibar திருச்சி, சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்தவர் ரத்தினம்.  ரயில்வே துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது தந்தை ராணுவவீரர். இதனால் அந்த காலத்தில் ரத்தனத்தின் குடும்பத்தினரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 'துப்பாக்கியார் குடும்பம்' என அடை மொழி வைத்து அழைத்து வந்தனர்.

இந்நிலையில், ரத்தினத்தின் மகன் ரமேஷ், பள்ளி படிப்பை முடித்தது, அதன் பிறகு படிக்க பிடிக்காததால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனது பெயரை துப்பாக்கி ரமேஷ் என பந்தாவாக மாற்றினார். அதோடு திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட துப்பாக்கி ரமேஷ்,  காவல்துறையில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என யோசித்தாராம். நீண்ட நாட்கள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்த துப்பாக்கி ரமேஷ், ரயில்வே துறையில் கைவரிசை காட்டுவது என முடி வெடுத்து, ஓடும் ரயில்களில் செயின் பறிப்பு, பயணிகளின் உடமைகளை திருடுவது, ரயில்வேக்கு சொந்தமான இரும்புகளை திருடுவது, ரயில்வே கிடங்குகளில் வந்து இறங்கும் உணவு பொருள் மூட்டைகளை கொள்ளை யடிப்பது, ரயில்வே குடியிருப்புகளில் கொள்ளை யடிப்பது, ரயில் தண்டவாளங்களில் திருடு வது, பழுதடைந்த ரயில் பெட்டிகளில் இரும்புராடு உள்ளிட்ட பொருட்களை திருடுவது என போலீஸில் சிக்காத வகையில் லாவகமாக திருட ஆரம்பித்திருக்கிறார்.

இது அவருக்கு கை கொடுக்க, கடந்த 20 வருடமாக இந்த வரிசையில் கைவரிசை காட்டி வந்திருக்கிறார். இதன் மூலம் கைநிறைய சம்பாதித்த துப்பாக்கி ரமேஷ், தான் கற்றுக் கொண்ட வித்தையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க நினைத்து, அதற்கு தகுந்த நபர்களை தேடியிருக்கிறார். அவரது தேடலில் வேலையில்லாபட்டதாரிகள், வறுமையில் வாடும் இளைஞர்கள் சிக்கியிருக்கின்றனர். அவர்களுக்கு திருச்சி சாமியார் தோப்பு பகுதியில் திருடுவது குறித்து பயிற்சி வகுப்பு எடுத்து வந்திருக்கிறார்.

இது தெரியாத காவல் துறையினர், 25க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் ரமேஷை தேடி வருகின்றோம் என்று மட்டும் கணக்கு காட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சிலநாட்களுக்கு முன் திருச்சி ரயில்வே ஜங்கசன் அருகில் ரமேஷ், முருகேசன், சேவியர் உள்ளிட்டோர் திருட்டு வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது அங்கு சி.ஆர்.பி.எப். காவல்துறையினர் வருவதை பார்த்த அவர்கள் தப்பியோடி இருக்கின்றனர். அவர்களை சி.ஆர்.பி.எப். காவல் துறையினர் துரத்தி பிடித்து கைது செய்திருக்கின்றனர். ஆனால், துப்பாக்கி ரமேஷ் மட்டும் எஸ் கேப் ஆகியிருக்கிறார்.

இதை யடுத்து, துப்பாக்கி ரமேஷை ரயில்வே காவல் துறையினர் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில், மீண்டும் ரயில்வே கிடங்கில் உணவு பொருள் மூட்டையை திருட வந்திருக்கிறார் துப்பாக்கி ரமேஷ். அப்போது, துப்பாக்கி ரமேஷை சுற்றி வளைத்த, ரயில்வே காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் நடந்த விசாரணையில், துப்பாக்கி ரமேஷ் சங்கிலியாண்டபுரம் பகுதியில் திருடுவது குறித்து பலருக்கு பயிற்சி வகுப் பெடுத்தது தெரியவந்திருக்கிறது. மேலும், ரயில்வே காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட முருகேசனுக்கும், ரமேஷ் பயிற்சி கொடுத்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

சி.ஆனந்தகுமார்,


படம்: என்.ஜி.மணிகண்டன்
Thiruduvadhu eppadi ena vaguppu eduttha vaalibar kaidhu, vedikkai ulagam, thiruttu thozhilukku training class in trichy, kollaiyadikkum thozhil katthukoduttha thirudan, Thiruduvadhu eppadi ena vaguppu eduttha vaalibar kaidhu, training class for thief to teach how to steal, funny tamil news, funny thief,

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...