தேர்வு நெருங்கும் சமயத்தில் தவிர்க்க வேண்டியவைகள் சில

tips for students before exam in tamil, thervu nerungum samayangalil thavirkka vediya kaariyangal silaதேர்வு நெருங்கும் சமயத்தில், நமது உடல் நலனை நல்ல படியாக பராமரித்துக் கொள்வது முக்கியமானதென்றால், உடலில் காயமேற்படுத்தக்கூடிய வேறெந்த காரியத்தையும் செய்வதை தவிர்ப்பதும் நல்லது.
பொதுவாக, கிராமப் புற மாணவர்கள், கிணற்றில் டைவ் அடித்து குதித்து குளிப்பது, மரம் ஏறுவது, முள் வெட்டுவது மற்றும் விறகு வெட்டுவது போன்ற சில காரியங்களில் வழக்கமாக ஈடு படுவார்கள். அவை, அந்த மாணவர்களுக்கு வழக்கமான ஒன்று தான் என்றாலும், எதிர்பாராத சில நேரங்களில், அத்தகைய செயல்களில், விபத்துக்களும் நேர்வதுண்டு. எனவே, தேர்வின் போது, அது போன்ற செயல்களை(அவை வழக்கமான ஒன்றாக இருப்பினும் கூட) தயவு செய்து சில நாட்களுக்கு ஒத்தி வைக்கவும். தேர்வு முடிந்த பிறகு, என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளவும்.

கிராமப் புற மாணவர்கள் தவிர, நகர்ப் புற மாணவர்களும் சேர்ந்து, வேறு சில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும். கூர்மையான ஆயுதங்களை வைத்து ஏதேனும் வேலை செய்தல், பைக்கில் சாகச பயணம் அல்லது வேகமாக செல்லுதல், நெருப்பு தொடர்பான வேலைகளில் ஈடுபடுதல், தேவையற்ற அல்லது பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லுதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

ஏனெனில், தேர்வின் போது, கண்களும், கைகளும் மிக முக்கியமானவை. உங்களின் நடவடிக்கைகளால், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுமானால், அது தேர்வையே பாதித்து விடும். உங்களின் விரல் நகங்களை, பிளேடு பயன் படுத்தாமல், நகவெட்டிக் கொண்டு வெட்டி, தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
tips for students before exam in tamil, thervu nerungum samayangalil thavirkka vediya kaariyangal sila, paritchai neram seiyya koodaadha kaariyangal silavatrai therindhu kollungal. Palli paritchai near tips, Exam tips for students in tamil, kalvi seidhigal, kalvisolai

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...