'மால்டா லெமன்' - ஒரு எலுமிச்சை காயின் எடை ஒன்றரை கிலோ

Malta lemon - 'மால்டா லெமன்' - ஒரு எலுமிச்சை காயின் எடை ஒன்றரை கிலோ
Malta lemon oru kaai oru kilo edai kaaikkiradhu , vivasaya seidhigal, elumichai saagubadi, periya raga elumichai palam vivasayam, agri news in tamil

திண்டுக்கல்: நத்தம் அருகே மூங்கில்பட்டியில் ஒரு காய் ஒன்றரை கிலோ எடையில், 'மால்டா லெமன்' காய்த்து குலுங்குகிறது.
ஆஸ்திரேலியா எலுமிச்சையின் ஒருரகத்தைச் சேர்ந்த, இந்த 'மால்டா லெமன்' நடவு செய்த ஓராண்டுக்குள் காய்க்கத் துவங்கும். பூச்சிகள் தாக்காது. மருந்து தெளிக்கவும் தேவையில்லை. இது நாட்டு எலுமிச்சை போன்ற மணம், சுவை கொண்டது.ஒரு காய் ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ வரை இருக்கும். இதனை பிழிந்தால் 150 மி.லி., க்கு மேலாக சாறு கிடைக்கும். சாதாரண நாட்டு எலுமிச்சையின் 25 பழங்களின் சாறுக்கு இது சமம். இதனை சாதாரண எலுமிச்சை போலவே, ஜூஸ், ஊறுகாய் தயாரிக்கலாம்.


இந்த 'மால்டா லெமன்' திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள மூங்கில்பட்டியில் ஒரு பண்ணையில் உள்ளது. விவசாயி ஆனந்தவேல் கூறியதாவது: கேரளாவில் இருந்து வாங்கி பரீட்சார்த்தமாக விளைவித்தேன். நல்ல பயன் தருகிறது. ;தோட்டம் அருகில் நல்ல மணம் வீசுகிறது. ஒரு காய் ஒரு கிலோவில் இருந்து ஒன்றரை கிலோ வரைக்கும் உள்ளது. தினமும் நீர் பாய்ச்ச வேண்டும். நோய் தாக்குதல் இல்லாததால் பிரச்னை இல்லை. அதிகளவு சாறும் கிடைப்பதால், ஒரு பழத்தை பயன்படுத்தி 3 லிட்டர் தண்ணீரில் ஜூஸ் தயாரிக்கலாம், என்றார். தொடர்புக்கு: 98421 42207.
- தினமலர் நாளிதழிலிருந்து

Malta lemon oru kaai oru kilo kaaikkiradhu , vivasaya seidhigal, elumichai saagubadi, periya raga elumichai palam vivasayam, agri news in tamil




No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...