IIT நுழைவுத் தேர்வில் வெற்றிபெற கோச்சிங் வகுப்புகள் அவசியமா?

IIT JEE nulaivu thervu payirchi vaguppugl avasiyam

IIT nulaivu thervil vetri pera coaching avasiyama..? ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற கோச்சிங் வகுப்புகள் அவசியமா?


IIT நுழைவுத் தேர்வில் வெல்ல, கோச்சிங் வகுப்பிற்கு கட்டாயம் செல்ல வேண்டுமா? அல்லது சுயமாகவே திட்ட மிட்டுப் படித்து தேர்வை வென்று விட முடியுமா? என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் உள்ளது.

2014ம் ஆண்டு புள்ளி விபரக் கணக்குகளை எடுத்துப் பார்க்கும் போது, ஆச்சர்யப்படும் படியான தகவல்கள் கிடைக்கின்றன. அந்தாண்டு JEE advanced தேறியவர்களில், கோச்சிங் வகுப்புகளுக்கு சென்றவர்களை விட, தானாகவே திட்டமிட்டுப் படித்தவர்கள்தான் அதிகம் என்பதுவே அந்த தகவல்.
மும்பை, டில்லி, கான்பூர், குவகாத்தி, காரக்பூர், சென்னை மற்றும் ரூர்கி ஆகிய IIT மண்டலங்களின் வாரியாக புள்ளி விபரங்களைப் பார்க்கும் போது, சென்னை மண்டலத்தைத் தவிர, இதர அனைத்து மண்டலங்களிலும், கோச்சிங் சென்றவர்களைவிட, சுயமாக படித்தவர்களே அதிகம் வென்றிருக்கிறார்கள்.

Joint Implementation Committee 2014 என்ற அமைப்பு, ஐ.ஐ.டி.,களில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விபரங்களை சேகரித்து வெளியிட்ட அறிக்கையின் படி, JEE Advanced 2014 தேறியோரில், 52% பேர் சுயமாக திட்டமிட்டுப் படித்தவர்களாகவும், 48% பேர் கோச்சிங் வகுப்புகளுக்கு சென்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

சுயமாக திட்ட மிட்டு படித்து, தேர்ச்சி பெற்றவர்களை அதிகம் கொண்ட IIT மண்டலங்களாக, காரக்பூர்(60.14%) மற்றும் குவகாத்தி(63.08%) போன்றவை விளங்குகின்றன. இதர 4 மண்டலங்களிலும், சுயமாக திட்டமிட்டுப் படித்தவர்கள், 50%க்கும் மேலானவர்களாக உள்ளனர்.

மொத்தம் 7 மண்டலங்களுள், சென்னை மண்டலம் மட்டுமே விதிவிலக்காக உள்ளது. இங்கு மட்டுமே, சுயமாக திட்ட மிட்டுப் படித்தவர்களை விட, கோச்சிங் சென்றவர்கள் அதிகம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கு பதிவு செய்தவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், அவர்களில் 63% பேர், சுயமாக திட்டமிட்டுப் படித்தக் குழுவை சேர்ந்தவர்கள். வெறும் 37% பேர் மட்டுமே கோச்சிங் வகுப்புகளை நாடியவர்கள்.

ஏறக்குறைய 14 லட்சம் மாணவர்கள் JEE Main 2014 தேர்வை எழுதியதில், வெறும் 27,152 மாணவர்கள் மட்டுமே Advanced தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IIT nulaivu thervu payirchi vaguppugl avasiyam poga vendaam suyamaaga paditthu eliudhiyavargal adhigam per therchi petrullanar , IIT nulaivu thervil vetri pera coaching avasiyama+IIT entrance coaching is required or not tamil education details for student

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...